கோட்டாபய ராஜபக்ஸவின் வெற்றி சத்தியத்திற்க்கும் அசத்தியத்திற்று க்குமான வெற்றியாகும்.-உலமா கட்சி தலைவர் முபாரக் அப்துல் மஜீத்


கோட்டாபய ராஜபக்ஸ அவர்களின் வெற்றி தொடர்பாக உலமா கட்சி தலைவர் முபாரக் அப்துல் மஜீத்

ஊடகவியலாளர் சந்திப்பு நேற்ரிரவு(18) கல்முனையில் இடம்பெற்றது .

இதன் போது கருத்து தெரிவிக்கையில் மேற்க்கண்டவாறு தெரிவித்தார் அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்


கோட்டாபய ராஜபக்ஸவின் வெற்றி சத்தியத்திற்க்கும் அசத்தியத்திற்று க்குமான வெற்றியாகும்.இவரின் வெற்றி மகத்தான வெற்றியாகும்.

தமிழ்,முஸ்லிம் தலைவர்கள் மக்களை பிழையாக வழி நடாத்தி ஏமாற்றுகின்றனர்.

குறிப்பாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவராக ரவூப் ஹக்கீம் பொறுப்பேற்ற காலம் தொடக்கம் ஐக்கிய தேசிய கட்சியின் ஏஜெண்டாக மாறி மக்களை பிழையாக வழி நடாத்து கிறார்.

கடந்த 2005 ஆண்டு தேர்தல் மற்றும்
யுத்தம் முடிவடைந்த பின் 2010 ஆண்டு தேர்த்தலில் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார் என்ற சூழ் நிலை காணப்பட்ட போதும் மக்களை பிழையாக வழிநடாத்தினார். நன்றி சொல்ல வேண்டிய முஸ்லிம்களை நன்றி கெட்டவராக்கினார்.பின்னர் அதே ஆண்டில் அமைச்சு பதவி வகித்தார்


இதன் மூலம் முஸ்லிம்களை சந்தர்ப்பவாதிகள் எனும் தோற்றத்தை உலகிற்க்கு காட்டப்படுகின்றது. இது ஒரு பிழையான நடைமுறையாகும். இவ்வாறு நடக்க வேண்டாம் என நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் .முஸ்லிம் மக்கள் உண்மையை புரிந்துகொள்ள வேண்டும்.

முஸ்லிம் கட்சி தலைவர்கள்கட்சியையும் மக்களையும் காப்பாற்ற வேண்டும் என்கின்றனர் ஆனால் அவர்கள் தங்களையே பாதுகாத்து கொள்கின்றனர்.


மேலும் குறிப்பாக கடந்த 2010 மகிந்த ராஜபக்ஷ ஆட்சியில் முஸ்லிம் ஆசிரியர் 150 நியமனம் வழங்கப்பட்டது. ஆனால் கடந்த ஐக்கிய தேசிய கட்சி அரசில் சமய பாட ஆசிரியர் நியமனம் வழங்க வர்த்தமானி வெளியிட்டும் பெற்று கொடுக்க வில்லை .நாட்டில் உள்ள அனைத்து உலமாக்களையும் எங்களுடன் இணையுமாறு அழைப்பு விடுக்கிறேன் .இதன் மூலம் எமது உரிமைகள் பெற்றுக்கொள்ளலாம்.

மேலும் கோடடாபய ராஜபக்ஷ தூர நோக்குள்ள தலைவர் .இதில் மக்கள் மிக தெளிவாக இருக்க வேண்டும் என்றார்.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்