சஜித் ஜனாதிபதியானதும் மத அடிப்படைவாதத்திற்கு எதிராக போர் தொடுக்கவுள்ளேன் - சம்பிக

அமைச்சர் சஜித் பிரேமதாஸ ஜனாதிபதியாக தெரிவானதும் போதைப்பொருள்,மோசடி மற்றும் 
மத அடிப்படைவாதம் ஆகிய மூன்றுக்கும் எதிராக போர் தொடுக்க இருப்பதாக அமைச்சர் பாட்டாளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

புது ஜனாதிபதியாக செயற்பட இருக்கும் அவர் தமது அமைச்சரவையில் மோசடியுடன் தொடர்புள்ள எவருக்கும் இடமளிக்கப் போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

இவரது அரசாங்கத்தில் சகல அமைச்சுக்கள், நிறுவனங்கள் என்பவற்றை மேற்பார்வை செய்ய மேற்பார்வை செயலணி ஒன்றை உருவாக்க திட்டமிட்டுள்ளார். 

இவர் புரட்சிகர மாற்றங்களினூடாக நாட்டை புதிய பரிமாணத்திற்குக் கொண்டு செல்ல இருப்பதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

சஜித் பிரேமதாஸவின் ‘சஜித்தின் சமூக புரட்சி’ தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடக மாநாடு நேற்று இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெற்றது. 

இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.

Comments

popular posts

சீதனம். ஹறாமானதா? முபாறக் மௌலவியின் விளக்கம்.

ஹக்கீமை சமூக துரோகி என குற்றம் சாட்டி அரசியல் செய்யும் முஸர்ரப்