நாங்கள் செய்திருக்கின்ற அபிவிருத்தி பணிகளுக்கு பதில் கூற முடியாததால் தான் மொட்டுக் கட்சியினர் இப்போது இனவாதத்தை பேசித் திரிகின்றார்கள்.

எப்படியாவது மக்களின் வாக்குகளை பெற்றுக் கொண்டு இனவாதத்தின் மூலம் நாட்டினை 
தீ வைத்துக் கொளுத்தும்  வேலைத்திட்டத்தினை கோட்டபய ராஜபக்க்ஷ அணியினர் முயற்சிப்பதாக தெரிவித்துள்ள பிரதமர் ரணில் விக்ரம சிங்க தென்மாகாணத்திற்கு இவர்கள் சென்று நாங்கள் தமிழ் கட்சியுடன் கள்ளத்தனமான ஒப்பந்தங்களை செய்துள்ளதாக பொய்யான கதைகளை தெரிவித்துவருகின்றார் என்றும் தெரிவித்தார்.


அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட இளைஞர் மாநாடு இன்று சம்மாந்துறை அப்துல் மஜீத் மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும் அமைச்சருமான றிசாத் பதியுதீன் தலைமையில் இடம் பெற்றத இந்த மாநாட்டில் மேலும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவிக்கையில் -


எங்களது கட்சியினை ஆரம்பித்த அமரர் டி.எஸ்.சேனாநாயக்க அவர்களை கறுப்பு பெரிய சிங்களவர் என்று சொன்னார்கள்.அவர் தெரிவித்தார் சிங்கள மக்களது பாதுகாப்பும்,பலமும் இருக்கின்றது தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுடன் மிகவும் சினேகபூர்வத்துடனும்,நெருக்கத்துடனும் வாழுகின்ற போது என்பதாக,அவர் தான் இலங்கையர் என்கின்ற அடையாளத்தை முன்கொண்டு சென்றவர்.அந்த பாதையிலே தான் நாங்கள் செல்கின்றோம்.


ராஜபக்ஷவும்,மொட்டுக்கட்சியும் செல்வது வேறு பாதையில் நாங்கள் செய்திருக்கின்ற அபிவிருத்தி பணிகளுக்கு பதில் கூற முடியாததால், இனவாதத்தை இப்போது பேசித்திரிகின்றார்கள்.


கிழக்கினை முஸ்லிம்களுக்கு நாங்கள் பாரப்படுத்தப் போவதாகவும்,தமிழ் மக்களுக்கு இங்கு இடமில்லை என்பதால் பிள்ளையானை முதலமைச்சராக்க போறார்களாம்.தமிழ் மக்களுக்கு முதலமைச்சர் வேண்டுமென்றால் விருப்பமான ஒருவரை தெரிவு செய்து கொள்ளலாம்.ஆனால் இவர்கள் பிள்ளையானை முதலமைச்சராக ஏற்றுக் கொள்ளவிருப்பமில்லை.இந்த கிழக்கு மாகாணத்தில் வாழும் தமிழ்,முஸ்லிம்,சிங்கள மக்களுக்கு உரிமை இருக்கின்றது ஒரு முதலமைச்சரை தெரிவு செய்ய.இங்கு வாழும் சகல சமூகமும் ஒற்றுமையுடன் வாழ்வதினால் முதலமைச்சர் தெரிவினை அவர்களிடத்திலேயே கொடுத்துவிடுவோம்.


கோட்டாபய ராஜபக்ஷவுக்கோ,எனக்கோ இங்கு வாக்கு இல்லை.இதனை கிழக்கு மக்களிடமே விட்டுவிடுவோம்.சிங்களவரோ,தமிழரோ,முஸ்லிமோ எவராக இருந்தாலும் மிகச் சிறந்த செயற்திறன் மிக்கவர் ஒருவரே முதலமைச்சராக இருக்க வேண்டும்.


இவர்கள் தெற்குக்கு சென்று பிரசாரம் செய்கின்றார்கள் நாங்கள் தமிழ் கட்சிகளுடன் இரகசிய ஒப்பந்தங்கள் செய்துள்ளோம் என்று,இப்படித்தான் இவர்கள் இனவாதத்தை விதைக்கின்றார்கள்.உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பின் பின்னரும் இதைத்தான் இவர்கள் செய்தார்கள்.இன்னும் இதனையே தொடர்ந்து செய்கின்றார்கள்.இவர்களுடன் இன ஜக்கியத்தை ஏற்படுத்த முடியுமா,தேசிய நல்லுறவை ஏற்படுத்த முடியுமா,எந்த வகையிலாவது வாக்குகளை பெற்றுக் கொண்டு,நாட்டினை தீ வைத்தாலும் பரவாயில்லை என்று நினைக்கின்றனர்.அதே போல் நாங்கள் அபிவிருத்திகளை முன்னெடுகக வேண்டும்,நாட்டினை நவீன கட்டமைப்புக்குள் கொண்டுவரவேண்டும்.அதே போல் கிழக்கினையும் பாரிய அபிவிருத்தி செய்ய வேண்டியுள்ளது.சர்வதேச நாடுகளிடம் வேண்டுகோள்விடுக்கின்றேன்.வடக்கு,கிழக்கு மற்றும் மொனராகல  பிரதேசங்கள் யுத்தத்தினால் அழிந்து போன பிரதேசங்களாக கணித்து இந்த பிரதேசத்தினை அபிவிருத்தி செய்ய தேவையான அதிகளவு நிதி வழங்குமாறு.இன்னும் பாதைகளை அமைக்க வேண்டியுள்ளதுடன்,கிராமங்களையும் அபிவிருத்தி செய்ய வேண்டியுள்ளது.உலர் வலயமாக இருக்கின்ற இபபிரதேசங்களில் விவசாய நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டியுள்ளதுடன்.இதற்கு தேவையான இயந்திர உபகரணங்களை கொள்வனவு செய்யவும்,நெற் களஞ்சிய சாலைகளை ஏற்படுத்தவும் உதவிகளை வழங்கவுள்ளோம்.விஞ்ஞான ரீதியான கால்நடைகளை இப்பிரதேசத்தில் வளர்க்க வேண்டும்.இதே போல் கால்நடைகளுக்கு தேவையான மேய்ச்சல் நிலங்களை அடையாளப்படுத்த வேண்டும்.இதன் மூலம் நல்ல விவசாயத்தை மேம்படுத்தி,பால் உற்பத்திகளை அதிகரிக்கலாம்.இப்பிரதேச மீன்பிடி துறையினை நவீன மயப்படுத்தி கடல்சார் உணவுகளை ஏற்றுமதி செய்யும் திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.தற்போது பயன்படுத்துகின்ற படகுகளை விட அதிவலு சக்தி கொண்ட படகுகளை  பெற்றுக் கொள்வதற்கான நிதியினை  வழங்கவுள்ளோம்.இந்த உற்பத்திகளை பாதுகாக்க குளிரூட்டி வசதிகளை ஏற்படுத்த தனியார் துறையினருக்கு வரிச் சலுகைகள் வழங்கப்படும்.கொழும்பு மற்றும் திருகோணமலை துறைமுகங்களை நாங்கள் அபிவிருத்தி செய்து இருக்கின்றோம்.இதே போன்று திருகோணமலை துறைமுகத்தையும் அபிவிருத்தி செய்யவுள்ளோம்.கப்பல் துறையியில் பாரிய கைத்தொழில் பேட்டை அமைப்பதற்கு 1000 ஏக்கர் நிலப்பரப்பு ஒதுக்கப்பட்டுள்ளது.இதற்கான முதலீடுகளை பெற்றுக் கொண்டு தொழிற்சாலைகளை ஆரம்பிக்கவுள்ளோம்.இதே போன்று அம்பந்தோடடையில்  பத்தாயிரம் ஏக்கர் நிலப்பரப்பு பெறப்பட்டு அபிவிருத்திகள் இடம் பெறுகின்றன.இதனால் இங்கிருக்கின்ற மக்களுக்கு வெல்லவாயவுக்கும்,கப்பல் துறைக்கும் செல்ல முடியும்.இதற்கு மேலதிகமாக அம்பாறைக்கும்,மட்டக்களப்புக்கும் தனியான முதலீட்டு வலயத்தை ஏற்படுத்தவுள்ளேன்.இதன் மூலம் தேசிய உற்பத்திக்கு தேவையான பங்களிப்பினை வழங்க முடியும்.இதன் மூலம் புதிய பொருளாதார நடவடிக்கைகள் இடம் பெறும்.சுற்றுலாத் துறை இதன் மூலம் விருத்தியடையும்.மட்டக்களப்பு விமான நிலையம் பலாலி விமான நிலையம் போன்று இந்தியாவுக்கும் இலங்கைக்குமான விமான சேவைகள் இடம் பெறும் தளமாக மாற்றப்படும்.சென்னை-பலாலி,சென்னை சென்னை -மட்டக்களப்பு,மட்டக்களப்பு -கொழும்புக்கான விமான சேவைகள் ஆரம்பிக்கப்படும்.தற்போது மட்டக்களப்பு விமான நிலையம் புனரமைப்பு செய்யப்பட்டுவருகின்றது.இதே போல் அடுத்த வருடத்தில் இருந்து மத்தள விமான நிலையமும் செயற்படும்.இதனால் வாகரை முதல்  பொத்துவில் பிரதேசம் வரை பாரிய சுற்றுலா பிரதேசமாக மாற்றப்படும். கல்லோய பிரதேசத்தில் காணப்படும் வனஜீவிகள் பூங்கா போன்று இப்பிரதேசங்களும் அபிவிருத்தி கானும்.ஹோட்டல் துறை ,வீடுகளில் சிறு உணவகங்கள்,உள்ளிட்ட பல அபிவிருத்திகள் இங்கு வரும் இதனுாடாக தொழில் வாய்ப்பு அதிகரிக்கும் என்று கூறிய பிரதமர் கிழக்கில் தகவல் தொழில் பயிற்சி நிலையங்களை உருவுாக்கி இளைஞர்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவு  செய்ய முடியும்அமைச்சர் றிசாத் பதியுதீனும்,அவரது மக்கள் காங்கிரசும் சஜித்தின் வெற்றிக்கு பாடுபடுவதற்கு எனது நன்றிகளை கூறுகின்றேன் என்றும் பிரதமர் கூறினார்.


இந்த நிகழ்வில் அமைச்சர் ரவி கருநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர் எம்.இஸ்மாயில் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

- இர்ஷாத்

Comments

popular posts

மைத்திரிபால ஒரு புத்திஜீவியாகவோ, அறிஞராகவோ அவருடைய ஆட்சிக் காலத்தில் செயற்படவில்லை.

சாய்ந்த‌ம‌ருதுக்கான‌ ச‌பையை பெறும் மிக‌ இல‌குவான‌ ச‌ந்த‌ர்ப்ப‌ம் இருந்தும் இப்போது ஒப்பாரி வைப்ப‌தில் ப‌ல‌னில்லை.

Sri Lanka COSMI Founder President appointed to London’s Peace Institute