தமிழ் மொழி பெயர் பலகைகளை சேதமாக்கியவர்களை உடனடியாக கைது செய்யுமாறு மகிந்த ராஜபக்ச பொலிசாருக்கு உத்தரவு.

கடந்த வாரம் முதல் இலங்கையின் சில பிரதேசங்களில், குறிப்பாக
 பானதுறை, கெறவளபிட்டிய பிரதேசங்களில் உள்ள வீதிப் பெயர் பலகைகளில்  காணப்பட்ட தமிழ் மொழி சொற்களை இனந்தெரியாத நபர்கள் அழிததும், சேதம் செய்தும் இருந்தது அறிந்ததே..

இந்நிலையில் இது தொடர்பில் போலீசாரிடம் மற்றும் அதிகாரிகளி டம் முறைபாடுகளும் செய்யப் பட்டும், சமூக வலைகளில் பகிரப்பட்டும் வந்தது.

இதனை அடுத்து இன்று மாலை ,
தமிழ் மொழியிலான  பெயர் பலகை களை நாசம் செய்தவர்களை   உடனடியாக கைது செய்யு மாறு பிரதமர் மகிந்த ராஜபக்ச பொலிசாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.


மேலும் சேதமாக்கப் பட்ட பெயர் பலகைகளை உடன் மாற்றுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கட்டளையும் பிறப்பித்துள்ளார். 

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்