முஸ்லிம்களை இலக்கு வைத்து கருத்து... கருணா வுக்கு எதிராக விஷேட விசாரணைகள் ஆரம்பம்.

தமிழீழ விடுதலை புலிகளின் முன்னாள் உப தலைவரும் 
முன்னாள் பிரதி அமைச்சருமான கருணா அம்மான் என அறியப்படும் மினாயகமூர்த்தி முரளிதரன் முஸ்லிம்களை இலக்கு வைத்து வெளியிட்டதாக கூறப்படும் கருத்துக்கள் தொடர்பில் விஷேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


பொலிஸ் தலைமையகத்துக்கு தேர்தல்கள் ஆணைக் குழுவின் ஆணையாளர்களில் ஒருவரான பேராசிரியர் ரத்னஜீவன் ஹூல் அனுப்பியுள்ள முறைப்பாட்டுக்கு அமைய இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.



அதன்படி குறித்த முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் பொறுப்பு பொலிஸ் தலைமையகத்தினால் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தலைமையகத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

-madawala news

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்