யட்டியந்தோட்டை சம்பவம் - தேர்தலுடன் தொடர்புடைய சம்பவம் அல்ல -பொலிஸ் ஊடகப்பிரிவு

யட்டியந்தோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கனேபல்ல தோட்டத்தில், நேற்று (18) நடைபெற்ற தாக்குதல் சம்பவமானது,  தனிநபர்கள் இருவருக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தால் ஏற்பட்டுள்ளதென்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மதுபோதையில் இருந்த குறித்த இருவரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதாகவும், இது தொடர்பில் பொலிஸ் அவசரப் பிரிவின் 119 என்ற இலக்கத்தின் மூலம் கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கமைய, யட்டியந்தோட்டை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனரென, பொலிஸ் ஊடகப் பிரிவு ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்தச் சம்பவத்தை சில சமூக வலைத்தளங்கள் தவறாக திரிபுபடுத்தி வெளியிடுவதாகவும், இது தேர்தலுடன் தொடர்புடைய சம்பவம் இல்லை என்றும் பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் அறவுறுத்தியுள்ளது.

- நன்றி
Vanniexpreess news

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்