Skip to main content

இனவாத அரசியல் கலாசாரத்தால் இலங்கையின் எதிர்காலம் ஆபத்து

  இனவாத அரசியல் கலாசாரத்தால் இலங்கையின் எதிர்காலம் ஆபத்து –  அரசுக்கு கரு ஜயசூரிய எச்சரிக்கை புதிய அரசமைப்பை உருவாக்கி தமிழ், முஸ்லிம் மக்களின் அடிப்படை உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டும். இனவாதத்தைத் தூண்டி அரசியலை முன்னெடுக்கும் தற்போதைய அரசியல் பயணம் தொடருமாயின் எதிர்காலத்தில் மிகப்பெரிய பிரச்சினைகள் நாட்டினுள் உருவாகும் என எச்சரிக்கை விடுத்துள்ளார் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய. நாட்டின் சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் கருத்துரைக்கும்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:- “நாட்டில் தற்போது உருவாக்கப்பட்டு வருகின்ற இனவாத அரசியல் கலாசாரம் இலங்கையை நீண்ட காலத்துக்கு நெருக்கடிக்குள் தள்ளப்போகின்றது. இந்த விடயத்தில் அனைவரும் குறுகிய நோக்கத்தில் பார்க்கின்றனர். ஆனால், தூரநோக்கு சிந்தனையுடன் இந்த நாட்டின் இன – மத உரிமைகளைப் பலப்படுத்தும், பாதுகாக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். புதிய அரசமைப்பு உருவாக்கப்பட வேண்டும். இந்தப் புதிய அரசமைப்பில் ஜனநாயகம், மனித உரிமைகள் முழுமையாகப் பாதுகாக்கப்பட வேண்டும். அரசமைப்பின் 20 ஆவது திருத்தத்தைக் கொண்டுவந்து அதன் மூலம் பறிக்கப்பட்ட உரிமைகள் முழுமையாக

பைசைல் காசிம் தான் நிந்தவூரில் இழந்த மக்கள் செல்வாக்கை சாய்ந்தமருதில் எதிர்பார்க்கின்றாரா?

சாய்ந்தமருதில் இருந்து முஸ்லிம் காங்கிரசிற்கு 15,000 வாக்குகள் கட்டியாக கிடைக்கும், கல்முனைக்குடியில் 5,000 வாக்குகள்தான் கிடைக்கின்றது.கல்முனைக்காக சாய்ந்தமருது வாக்குகளை இழக்க முடியாது. பாராளுமன்ற உறுப்பினர் ஹரிஸ் முஸ்லிம் காங்கிரசை விட்டு தாராளமாக வெளியேறலாம்  என பைசல் ஹாசிம் அதிரடியாக கூறிய கருத்து சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருவதனை எல்லோரும் அறிவீர்கள்.

முஸ்லிம் காங்கிரசின் கோட்டையாகவும், பைசல் காசிமின் சொந்த ஊராகவும் இருக்கும் நிந்தவூரில் கடந்த பாராளுமன்ற, பிரதேச சபை தேர்தல்களில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனது ஆதிக்கத்தினை இஸ்தீரப்படுத்தியதினால் தனது எதிர்கால அரசியலுக்கும், பாராளுமன்ற கதிரைக்கும் ஏற்பட்டுள்ள  கேள்வியின் விடையாகவே தற்பொழுது வாக்குகளை குறிவைக்கும் திரு விளையாடலை பைசல் காசிம் சாய்ந்தமருது பக்கம் திருப்பி உள்ளார்.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் கல்முனை குடி மக்களால் அளிக்கப்பட்ட ஒட்டுமொத்த வாக்குகளையும் வைத்தே பைசல் காசிம் பாராளுமன்ற கதிரையில் உட்கார்ந்தார் என்பதனை முதலில் அவர் நன்கறியுணர்வுடன் ஞாபகப்படுத்திக்கொள்ள வேண்டும்.

 முன்னாள் நிதி அமைச்சர் முஸ்தபா, மற்றும்  முஸ்லிம் முன்னாள் முகாங்கிரசினுடைய செயலாளர் நாயகம் போன்ற முக்கிய தலைவர்கள் எல்லாம் நிந்தவூரை பிரதி நிதித்துவப்படுத்தினாலும் நாட்டில் உள்ள சகல முஸ்லிம்களும் எல்லாவிதமான உரிமைகளையும் பெற்று தங்களை தாங்கள் ஆளும் வகையில் சுய மரியாதையுடன் வாழ வேண்டும் என விரும்பியவர்களாகவே தங்களது அரசியலினை மேற்கொண்டார்கள்.

ஆனால் பைசல் காசிம் கிழக்கின் முக வெற்றிலையாக காணப்படும் கல்முனையினை தமிழ் பிரதேசத்துக்கு தாரை வார்த்து கொடுக்கும் முடிவின் ஓர் அங்கமாகவும், தனது அற்ப சுயநல அரசியலுக்காக கல்முனையினை முற்றாக ஓரம் கட்டும் வகையில் கல்முனை குடியில் உள்ள 5000 வாக்குகளும் முஸ்லிம் காங்கிரசிற்கு தேவை இல்லை என தெரிவித்துள்ள கருத்தானது சுய மரியாதை உள்ள ஒவ்வொரு கல்முனைக்குடி மகனுடைய உள்ளத்தில் இருந்தும் இரத்தக்கண்ணீர் வரவழைக்கும் விடயமாகவே பார்க்கப்படுகின்றது.

நிந்தவூரில் பைசல் காசிம் தனது ஆதிக்கத்தினை நிலை நாட்டுவதில் பாரிய பங்கினை வகித்த தற்போதைய பிரதேச சபை தவிசாளர் தாஹிர் அகில இலங்கை மக்கள் காங்கிரசோடு இணைந்ததற்கு பிற்பாடு பைசல் காசிமின் எதிர்கால அரசியல் முற்றிலும் கேள்விக்குறியாகிய நிலையில் அதனை சரி செய்துகொள்ளலாம் என்ற பகற்கனவிலேதான் பைசல் காசிம் தற்பொழுது கல்முனை குடிக்கு எதிரான கருத்தினையும், பாராளுமன்ற உறுப்பினர் ஹரிசினை முஸ்லிம் காங்கிரசில் இருந்து ஓரங்கட்ட வேண்டும் என்ற கருத்தினையும் தெரிவித்துள்ளார்.

சாய்ந்தமருத்துக்கான தனியான பிரதேச சபையினை கொடுக்கின்ற விடயத்தில் எந்தளவிற்கு நியாயம் இருக்கின்றதோ.! அதே அளவான நியாயமும், எதிர்கால கால சந்ததியினர்களின் உரிமைகள் சம்பந்தமான பிரச்சனைகள் அடங்கிய தூர நோக்கு சிந்தனைமிக்க தீர்க்கமான அரசியல் காய் நகர்த்தல்கள் மேற்கொள்ளப்பட வேண்டிய விடயத்தினை வைத்து கல்முனைக்கான வடக்கு பிரதேச செயலகத்தினுடைய எல்லை நிர்ணய விடயம் கையாளப்பட வேண்டியுள்ளது.

ஆனால் இவை சம்பந்தமான எந்த அறிவும் இல்லாத நிலையில் பைசல் காசிம் தங்களுக்கு கல்முனை குடியில் உள்ள 5000 வாக்குகள் தேவை இல்லை எனவும், சாய்ந்தமருதில் உள்ள 15000 வாக்குகளே முஸ்லிம் காங்கிரசிற்கு முக்கியமானவை, ஹரிஸ் தாரளமாக கட்சியினை விட்டு வெளியேறலாம் என தெரிவித்திருப்பதானது அவருடைய அரசியல் அறியாமைக்கு அப்பால் அவருடைய சுயரூபத்தினை சமூகத்துக்கு வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.

அது மட்டுமல்லாமல் கட்சியின் முஸ்லிம் காங்கிரசினுடைய வளர்ச்சியில் முக்கியமான புள்ளிகளாக இருந்த அதவுல்லா, ஹசன் அலி, ஹிஸ்புல்லா, பசீர் சேகுதாவூத் என்பவர்களை கட்சியினை ஓரம்கட்டுவதற்காக எவ்வாறு மிகவும் சாதுரியமாக திரை மறைவிலும், நேரடியாகவும், சமூகமயப்படுத்தி செயற்பட்டு தலைவர் அப்துர் ரவூபினால் வெளியேற்றப்பட்டார்களோ.! 

அவ்வாறே தற்பொழுது ஹரிசினை கட்சியில் இருந்து ஓரங்கட்டுவதற்காக பைசல் காசிம் அதற்கான முழுமையான கொந்துராத்தினை கையில் எடுத்து சாய்ந்தமருதுக்காக முதலைக்கண்னீர் வடிக்கும் நாடகத்தினை அரங்கேற்ற தொடங்கியுள்ளார்.

ஆனால் எல்லோருக்கும் காலம் பதில் சொல்லுவதற்கு வெகு தூரம் செல்லாது என்பதுதான் அரசியலில் வரலாற்று உண்மையாக இருக்கின்றது. அந்த வகையில் கல்முனை மக்களின் வாக்குகளை புறக்கணித்து ,ஹரீசை ஓரம்கட்டுவதன் மூலம் தான் நிந்தவூரில் இழந்துள்ள செல்வாக்கிற்கு பதிலால சாய்ந்தமருதினுடைய 15000 வாக்குகளை பெற்று விடலாம் அதனால் தனது எதிர்கால அரசியலை தக்கவைத்து பாராளுமன்ற கதிரையில் மீண்டும் உட்கார்ந்து விடலாம் என்ற பைசல் காசிமுடைய பகற்கனவிற்கு காலம் பதில் சொல்லும் என்பது வெகு தூரத்தில் இல்லை என்பதே உண்மை.  

-ஏ. இர்ஷாத்

Comments

Popular posts from this blog

அதாவுல்லாவை புக‌ழும் ஹ‌ரீஸ்

ஒவ்வொரு நிமிடமும் நம்மை நோக்கி எறிகணைகள் வந்த வண்ணமே இருக்கிறது. நாங்கள் ஒற்றுமைப்பட்டு இனி செயலாற்ற முன்வர வேண்டும். அம்பாறை மாவட்டத்தில் உள்ள சகல அரசியல் கட்சி முக்கியஸ்தர்களும் ஒன்றிணைந்து எதிர்வரும் பொதுத்தேர்தலை சந்தித்து நாங்கள் ஒற்றுமையாக வாக்களித்தால் அம்பாறை மாவட்டத்தில் இருந்து ஐந்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாவார்கள் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி  எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.  தொடர்ந்தும் அங்கு பேசும் போது, கல்முனை பிரதேச விவகாரம் பற்றிய பிரதமருடனான கலந்துரையாடலுக்கு குறித்த தொகுதியின் மக்கள் பிரதிநிதியாகிய எனக்கு எவ்வித அழைப்புக்களும் விடுக்கப்பட்டிருக்க வில்லை. நான் நேரடியாக பிரதமர் மஹிந்தவை சந்தித்து மக்களின் பிரச்சினையை பற்றி தெளிவாக விளக்கியவுடன் அன்று மாலை என்னையும் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறும் அதற்கான ஏற்பாடுகளை தான் செய்வதாகவும் வாக்குறுதியளித்தார். அதன் பிரகாரமே நான் அக்கூட்டத்திற்க்கு சென்று வரவேற்பறையில் காத்திருந்தேன். அங்கு கலந்து கொண்டிருந்த முக்கிய பிரமுகர்கள் பலரும் அதிருப்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினால் சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியான கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானம்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினால் சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியான கரப்பாந்தாட்ட  விளையாட்டு மைதானம்  மதவாக்குள பிரதேசத்திற்கு  அமைத்து கொடுக்கப்ப்பட்டுள்ளது. கௌரவ முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான அல்ஹாஜ் றிஷாத் பதுயுதீன் அவர்களின் நிதியின் மூலம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் புத்தள மாவட்ட அமைப்பாளர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் முயற்சியினால் அகில இலங்கை மக்கள்  காங்கிரசின் மதவாக்குள கட்சிக் குழுவின் வேண்டுகோளுக்கு இணங்க மதவாக்குள பிரதேசத்திற்கு மிக நீண்டகால தேவைப்பாடாக இருந்த கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானம் நேற்று கெளரவ அலி சப்ரி ரஹீம் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது. அந்தவகையில் இந்த கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானமானது சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியாகும் எனவே இதனை  ஊருக்கு  அமைத்து கொடுத்தமைக்கு மதவாக்குள ஊர் மக்கள் மற்றும்இ விளையாட்டு குழு உறுப்பினர்கள் தங்கள் நன்றிகளை அகில இலங்கை மக்கள் காங்ரஸிற்கு  தெரிவித்து கொள்கின்றனர். ஊடகவியலாளர் சில்மியா யூசுப். 0769622313

சாய்ந்தமருது நகரசபை – விசேட வர்த்தமானி இன்று நள்ளிரவு !

சாய்ந்தமருது நகரசபை 2022 பங்குனி 20 அமுலாகும் வகையில் 2162/50 இலக்கம் கொண்ட அதிவிசேட வர்த்தமானி இன்று நள்ளிரவு வெளியாகவுள்ளது. பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் மற்றும் உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோனின் கையொப்பத்துடன் வெளியாகவுள்ளது . 1987ம் ஆண்டு கல்முனை தொகுதியில் 4 சபைகள் இயங்கின. அதனை முன்னாள் ஜனாதிபதி ஆர் .பிரேமதாசா ஒன்றிணைத்தார்.அதனை மீண்டும் பிரித்து தங்கள் பகுதியை ஒரு நகர சபையாக பிரித்து தருமாறு சாய்ந்தமருது மக்கள் கடந்த காலங்களில் பல்வேறு போராட்டங்கள் செய்தனர். அத்துடன் கடந்த 2018 ம் ஆண்டு இடம்பெற்ற உள்ளூராட்சி தேர்தலில் சுயேட்சை குழுவை சாய்ந்தமருது பள்ளிவாசல் களமிறக்கி அதில் 6 வட்டாரங்களையும் வென்று மொத்தம் 9 உறுப்பினர்களை பெற்றமை விசேட அம்சமாகும். கடந்த நல்லாட்சி அரசில் முஸ்லிம் அமைச்சர்கள் ,பிரதமர் நகர சபை தருவதாக வாக்குறுதி அளித்து ஏமாற்றியமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. அத்துடன் சாய்ந்தமருது பள்ளிவாசல் மற்றும் 6 மக்கள் பிரதி நிதிகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் வெற்றிக்காக ஒப்பந்தம் செய்து தேர்தல் பணிகளில் ஈடுபட்டனர் .கடந்த தேர்தலில் ச