அதாவுல்லா மன்னிப்பு கேட்க வேண்டும் - சுமந்திரன்

முன்னாள் அமைச்சர் அதாவுல்லா நேற்றையதினம் இடம்பெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் மலையக தமிழர்களை இழிவான வார்த்தைப் பிரயோகங்களைப் பயன்படுத்தி பேசியமை தொடர்பாக கடும் எதிர்ப்புக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் மலையக மக்களிடமும் அனைத்து தமிழ் மக்களிடமும் அதாவுல்லா மன்னிப்பு கேட்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

தமது டுவிட்டர் தளத்தில் இது தொடர்பில் அவர் இட்டுள்ள பதிவில்,

அதாவுல்லா மலையக மக்களிடமும் அனைத்து தமிழ் மக்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும். எமது சொந்தங்களைக் கேவலமாக விளிப்பதை நாம் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என தெரிவித்துள்ளார்.

Comments

popular posts

මුස්ලිම් ස්වාධීන කණ්ඩායම්වල අරමුණ වන්නේ මුස්ලිම් ප්‍රජාවගේ ඡන්දය බිඳ දැමීමයි,

அரசாங்கம் இனவாதத்துடன் செயற்படுவதாகக்கூறும் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை

ஹக்கீமை சமூக துரோகி என குற்றம் சாட்டி அரசியல் செய்யும் முஸர்ரப்