பலஸ்தீனத்தில் மஹிந்த ராஜபக்‌ஷ வீதி இருப்பது இலங்கை முஸ்லிம்களுக்கு கௌரவமாகும் - விரிவுரையாளர் முபிஸால்

மஹிந்த எனும் பாதிக்கப்பட்ட மக்களின் நண்பன் ..

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீனுக்கான அந்தஸ்த்து மிக முக்கியமானது,அது அழிக்கப்பட்ட தேசம் என்பதற்கப்பால் உலக வல்லரசுகளால் ஒதுக்கி வைக்கப்பட்ட தேசமுமாகும், அவ்வாறான தேசத்திற்கு இலங்கை ஜனாதிபதி ஒருவரின் துணிவு கரமான செயற்பாட்டையே பதிவு வெளிப்படுத்துகின்றது,

பலஸ்தீன்_பற்றிய_பார்வை

உலகில் சொந்த நாட்டில் அகதியாக்கப்பட்ட மக்கள் அடிப்படை வசதிகளற்று வாழுமிடம், அத்தோடு உலக நாடுகள், அமெரிக்க ,இஸ்ரேல்  வல்லரசுக்கு பயந்து இந்நாட்டுடன் உறவு வைத்துக் கொள்ளவும் அச்சப்படும் தேசமாகும்,

பலஸ்தீனம் பற்றிய இலங்கை அரசுகளின் கொள்கைகளில் பல மாறுதல்கள் காலத்திற்கு காலம் வந்தாலும்  மஹிந்த ராஜபக்‌ஷவின் காலம் பலஸ்தீன்  உறவுகளில் பொற்காலம் எனலாம் .

மஹிந்த_எனும்_பலஸ்தீன_அபிமானி

மஹிந்த ,சாதாரண பாராளுமன்ற உறுப்பினராக இருக்க்கும் காலம் தொட்டே பலஸ்தீன மக்களுக்காகவும் ,அந் நாட்டின்  உரிமைகளுக்காகவும்,  தொடர்ச்சியாக குரல்கொடுத்து வருகின்றார், இலங்கை- பலஸ்தீன் நட்புறவு சங்கத்தின் தலைவராக 30 வருடங்களுக்கு மேல் இருந்து வருகின்றார்.

இதனால் உலகின் பல நாடுகளிடனும், உள் நாட்டிலும்  தமது பலஸ்தீன ஆதரவு இராஜ தந்திர செயற்பாடுகளால்  எதிர்ப்புக்களை சம்பாதித்தவர், ஆனாலும் தனது கொள்கையில் இன்றும் உறுதியாக உள்ளவர்.

மஹிந்த_ராஜபக்ச_வீதி,

பலஸ்தீனில் உள்ள Beitunia Municipal council 2007 ம் ஆண்டு மஹிந்த ராஜபக்‌ஷ அவர்களின் நீண்டகால உதவியை பாராட்டும் வகையிலும், பலஸ்தீனத்துடன் மிக நெருக்கமான உறவைப் பேணும் உலகத் தலைவர் என்பதற்கும்  நன்றி கூறும் வகையிலும் #Mahinda_Rajapaksha_Road என பெயரிட்டு ,ஒரு வீதியை திறந்து வைத்தது, இது இலங்கை முஸ்லிம்களுக்கு கிடைத்த கௌரவமாகவும் கருத முடியும்

செயற்பாட்டு_உதவிகள்

மஹிந்த ராஜபக்‌ஷ தனது நீண்டகால  பலஸ்தீன்அபிமானத்தை  தான் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் செயற்படுத்திக் காட்டினார்,  அந்த வகையில் 2014 ம் ஆண்டு இலங்கை அரசின் பல கோடி  உதவியில்  Rajapaksha Vocational Training Centre ,ஐ அமைத்து பலஸ்தீன மாணவர்களின் கல்விக்கு உதவி புரிந்தார்.   அதனால் அவருக்கு பலஸ்தீன் நிர்வாகவும், மக்களும் என்றும் நன்றிக்கடன் உடையவர்களாக உள்ளனர்.

பலனை_எதிர்பாராத_மனநிலை

அமெரிக்கா, இஸ்ரேல் போன்ற நாடுகளினால் பாதிக்கப்பட்ட ஒரு பூர்வீக முஸ்லிம் தேசத்தின் உரிமைக்காக உலக அளவில் பேசவும், உதவி புரியவும் மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு , எந்த கட்டாயத் தேவையும் இல்லை, அவரும் அமெரிக்க சார்பு கொள்கை அரசுகள் போல வாய் மூடி இருக்க முடியும், அதனால் அவரது தனிப்பட்ட வாழ்வும், அரசியலிலும் பல பயன்களை அனுபவித்திருக்கலாம். ஆனால் அவ்வாறு செயற்படாமல் UN இல் இடம்பெற்ற பல வாக்களிப்புக்களில் பலஸ்தீன் சார்பாக வாக்களிக்க இலங்கை இராஜ தந்திரிகளுக்கு கட்டளை இட்டவர். அவரது இஸ்ரேல் விஜயத்தின் போதும் பலஸ்தீன உரிமைக்காக ஆணித்தரமாக குரல் கொடுத்தவர்

தோல்வியிலும்_துவளாத_தலைவன்

உலகில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வாதிடும் மஹிந்த போன்ற தலைவர்களை உள் நாட்டில் தோற்கடிக்க முயலும் இஸ்ரேலிய  அரசுசார்  கட்சிகள் ஒன்றிணைந்து 2015 ல் அவரைத் தோற்கடித்தனர், அதற்கு அப்பாவி இலங்கை முஸ்லிம்களும் பாவிக்கப்பட்டனர். தோல்வி அடைந்தாலும் இன்றும் பலஸ்தீனுக்காக குரல் கொடுக்கும் முக்கிய  தலைவராகவே மஹிந்த செயற்படுகின்றார், கடந்த ஆண்டு பலஸ்தீன நஹ்லா"தினத்தை அவரே ஆரம்பித்து வைத்ததும் குறிப்பிடத் தக்கது

 நாம்_என்ன_செய்யலாம்  ??

இலங்கை முஸ்லிம்களாகிய நாங்கள் உலக முஸ்லிம் நாடுகளுடன் நெருங்கிய உறவைப் பேணும் தலைவர்களை நாமும் பலப்படுத்த வேண்டும், அதன்மூலமே உலகிலும், இலங்கையிலும் எமக்கு எதிராக உருவாக்கப்படும் சதித் திட்டங்களை முறியடிக்க முடியும், இன்றேல் உணர்ச்சி வசப்பட்டு செயற்படுவதன் மூலம் எம்மை நேசிக்கும் தலைவர்களுக்கு  எம்மை அறியாமலே துரோகம் இழைத்தவர்களாக மாறி விடுவோம், அதுதான் கடந்த முறை இடம் பெற்றது,..இம்முறையாவது ..

நாட்டிற்கும்_நல்ல_தலைவர்களுக்கும் #நன்றி_உடைய_சமூகமாக_ஒத்துழைப்பு #வழங்குவோம்

Mufizal Aboobucker
Department of Philosophy
University of PeradeniyaComments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்