கேஸ் தட்டுப்பாடு ! கொள்வனவு செய்யும் சில இடங்களில் கைகலப்பு

நாடு முழுவதும் சமையல் எரிவாயு விநியோகம் செய்யப்பட்டாலும் பாவனையாளர்களுக்குப் போதுமான அளவு காஸ் சிலிண்டர்கள் கிடைப்பது அரிதாகவே உள்ளது.  

பிரதான விநியோகத்தர் லொறிகளில் வெளி மாவட்டங்களுக்கு எடுத்துச் சென்றாலும் விற்பனை நிலையங்களில் சிலிண்டர்களை இறக்குவதற்கு முன்னதாகவே பறித்துச்செல்லும் நிலையே தற்போது உருவாகியுள்ளது.  

விற்பனை நிலையங்களுக்கு சுமார் 20முதல் 25வரையிலான சிலிண்டர்களே விநியோகிக்கப்படுகிறது இதனால், போட்டிபோட்டுக்கொண்டும் முண்டியடித்துக்கொண்டும் சிலிண்டர்களை வாங்க காத்து நிற்கின்றனர். இதனால், சில இடங்களில் கைகலப்பு ஏற்படக் கூடிய நிலையும் தோன்றியுள்ளது.  

ஒரு சிலிண்டரை வாங்குவதங்காகப் பெருந்தொகை பணத்தைச்செலவு செய்ய வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் (4) சிலாபம் நகரிலுள்ள காஸ் விற்பனை நிலையத்தில் லொறியைக் கண்டதும் ஆண்கள், பெண்களெனப் பலரும் நீண்ட வரிசையில் நின்றிருந்தனர். விற்பனை நிலையத்தின் உரிமையாளரும் நேரடியாக அங்கு வந்து விற்பனையை அவதானித்துக் கொண்டிருந்தார். பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த சிலர் இன ரீதியாக அவரை ஏசி தாக்க முற்பட்ட சம்பவமும் இடம்பெற்றுள்ளது.  

சந்தையில் போதுமான சிலிண்டர்கள் இல்லாமையே இதற்குப் பிரதான காரணமென தெரிவிக்கப்படுகிறது. சிலர் காஸ் சிலிண்டர் ஏற்றிவரும் லொறியைப் பின்தொடர்ந்து சென்று காஸ் சிலிண்டர்களை வாங்க முற்பட்டனர்.   

Comments

popular posts

மைத்திரிபால ஒரு புத்திஜீவியாகவோ, அறிஞராகவோ அவருடைய ஆட்சிக் காலத்தில் செயற்படவில்லை.

Sri Lanka COSMI Founder President appointed to London’s Peace Institute

சாய்ந்த‌ம‌ருதுக்கான‌ ச‌பையை பெறும் மிக‌ இல‌குவான‌ ச‌ந்த‌ர்ப்ப‌ம் இருந்தும் இப்போது ஒப்பாரி வைப்ப‌தில் ப‌ல‌னில்லை.