முஸ்லிம் தலைமைகளின் பிழையான கணிப்பீடே சமூகத்தின் தோல்விக்கான காரணம் - எம்.எச்.எம்.இப்றாஹீம்

முஸ்லிம் சமூகத்தின் தோல்விக்கான முழுக்காரணம் முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தலைமைகளின் சுயநலம் மட்டும் தான். அத்துடன், முஸ்லிம் தலைமைகள் ஆதவன் பாட்டைக்காட்டி மக்களை ஏமாற்றுகின்றனர் என பிரபல அரசியல் ஆய்வாளர் எம்.எச்.எம்.இப்றாஹீம் தெரிவித்தார்.

இலங்கை சோசலிச குடியரசின் 7வது ஜனாதிபதியாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபாய ராஜபக்சவின் வெற்றி குறித்து கருத்துத் தெரிவிக்கையில் மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் தனது கருத்தில், நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலானது இலங்கை மக்களுக்கு பொதுவான ஒரு விடயத்தை தெளிவுபடுத்தியுள்ளது. அடுத்த ஜனாதிபதியாக பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபாய ராஜபக்ச தெரிவு செய்யப்படுவார் நாங்கள் தொடர்ச்சியாக கூறி வந்தோம். 

ஆனால், எங்களது கருத்துக்களை முஸ்லிம் தலைமைகள் அலட்சியம் செய்ததுடன், இவ்வாறான தலைவர்களே முஸ்லிம் சமூகத்தைக் காட்டிக்கொடுப்பவர்களாக இருந்தனர்.

எமது முஸ்லிம் சமூகமானது ஒரு கட்சியை மட்டும் நம்பாமல் பரந்து செயற்பட்டிருந்தால், இன்று இந்த வெற்றியில் நாமும் பங்காளர்களாக இருந்திருப்போம். முஸ்லிம் சமூகத்தின் இந்த தோல்விக்கான முழுக்காரணம் முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தலைமைகளின் சுயநலம் மட்டும் தான். புள்ளிவிபரம் தெரியாத தலைமைகளாக முஸ்லிம் தலைமைகள் காணப்படுகின்றனர்.

இவ்வாறுதான் 2010 இல் சரத் பொன்சேகாவை ஜனாதிபதி வேட்பாளராகக் கொண்டு வந்த சாணக்கியத் தலைமைக்கு மூக்குடைக்கப்பட்டது. அதேபோல இன்றும் சஜித் பிரேமதாசவைக் கொண்டு வந்து தற்போது மூக்குடைக்கப்பட்டு விட்டார். 

ஆகவேதான், முஸ்லிம் மக்களாகிய நாங்கள் இனியும் இந்த முஸ்லிம் தலைமைகளுக்குப் பின்னால் சென்று ஏமாற்றமடையக்கூடாது. முஸ்லிம் தலைமைகளை நம்பவும் கூடாதெனக் கேட்டுக்கொள்கின்றேன்.

மேலம், இன்று இந்த முஸ்லிம் தலைமைகள் ஆதவன் பாட்டைக்காட்டி மக்களை ஏமாற்றுகின்றனர். ஆகவே, முஸ்லிம் மக்கள் இன்னுமின்னும் ஆதவன் பாட்டை நம்பி வாக்களிக்காதீர்கள். எதிர்வருகின்ற தேர்தல்களில் மக்களாகிய நீங்கள் சிந்தித்துச் செயற்பட வேண்டும். 

எதிர்வரும் காலங்களில் இவ்வாறான ஒற்றுமையினை காரணமாக வைத்து செயற்பட சகல அரசியல் கட்சிகளும் முன்வர வேண்டுமென கோரிக்கை விடுக்கின்றேன் எனக்கேட்டுக்கொண்டுள்ளார்.
- பாருக் ஷிஹான்

Comments

popular posts

மைத்திரிபால ஒரு புத்திஜீவியாகவோ, அறிஞராகவோ அவருடைய ஆட்சிக் காலத்தில் செயற்படவில்லை.

சாய்ந்த‌ம‌ருதுக்கான‌ ச‌பையை பெறும் மிக‌ இல‌குவான‌ ச‌ந்த‌ர்ப்ப‌ம் இருந்தும் இப்போது ஒப்பாரி வைப்ப‌தில் ப‌ல‌னில்லை.

சஜித் தலைமையிலான அரசியல் கூட்டணி அமைக்கும் முயற்சி ஒத்திவைப்பு !