ஆட்சியாளர்களை கேள்வி கேட்கும் உரிமை மக்களுக்கு உண்டு

ஆட்சியாளர்களை கேள்வி கேட்கும் உரிமை மக்களுக்கு உண்டென தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்கவுக்கும் இலங்கை வர்த்தக சபை பிரதிநிதிகளுக்கும் இடையே நேற்று (வியாழக்கிழமை) மாலை கொழும்பில் சந்திப்பொன்று நடைபெற்றது.

இதன்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அநுர குமார திசாநாயக்க மேலும் கூறியுள்ளதாவது, “ பெரும்பாலான நாடுகளில் ஒரு ஆட்சியாளர் நியமிக்கப்பட்டால் அவரை கேள்வி கேட்க மக்களுக்கு முழு உரிமை வழங்கப்படுகின்றது.

அதேபோன்றதொரு கலாச்சாரத்தை இலங்கையிலும் உருவாக்க வேண்டும். ஒரு நாடு ஏழையாக மாறும்போது அந்த நாட்டிலுள்ள மக்களும் ஏழைகளாக மாறுவது தவிர்க்க முடியாதது.

எனவேதான் எனது பொருளாதாரத் திட்டம் ஒரு நாட்டை எவ்வாறு வளப்படுத்துவது மற்றும் வறுமையில் வாடும் மக்களை எவ்வாறு விடுவிப்பது என்பதை அடிப்படையாகக் கொண்டது.

இதேவேளை இலங்கையில் கல்வியில் புதிய மாற்றம் தேவை அதற்கானதொரு திட்டமும் எம்மிடம் உள்ளது. மேலும் பொது போக்குவரத்தைப் பயன்படுத்தும் 52% மக்கள் 5 ஆண்டுகளுக்குள் குறைந்தது 80% போக்குவரத்தைப் பெற வேண்டும்” எனவும் குறிப்பிட்டார்.

Comments

popular posts

மைத்திரிபால ஒரு புத்திஜீவியாகவோ, அறிஞராகவோ அவருடைய ஆட்சிக் காலத்தில் செயற்படவில்லை.

சாய்ந்த‌ம‌ருதுக்கான‌ ச‌பையை பெறும் மிக‌ இல‌குவான‌ ச‌ந்த‌ர்ப்ப‌ம் இருந்தும் இப்போது ஒப்பாரி வைப்ப‌தில் ப‌ல‌னில்லை.

Sri Lanka COSMI Founder President appointed to London’s Peace Institute