பரீட்சைக் காலத்தில் குத்பாக்களை சுருக்கிக் கொள்ளுங்கள் - அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா வேண்டுகோள்
பரீட்சைக் காலத்தில் குத்பாக்களை சுருக்கிக் கொள்ளுங்கள்
02.12.2019 ஆம் திகதி முதல் நாடு முழுவதும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை ஆரம்பமாகின்றது.
பரீட்சைக்கு தேற்றுகின்ற அனைத்து மாணவர்களும் பரீட்சைக்கு சிறப்பாக முகம் கொடுத்து சிறந்த பெறுபேறுகளை பெறுவதற்கும், நாட்டின் தலை சிறந்த கல்விமான்களாக உருவாவதற்கும் ஜம்இய்யா பிரார்த்திக்கின்றது.
நமது மாணவர்கள் பரீட்சையில் ஈடுபடும் இத்தருணத்தில் வெள்ளிக் கிழமை குத்பா பிரசங்கத்தை சுருக்கிக் கொள்ளுமாறு சகல கதீப்மார்களையும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டிக் கொள்கின்றது.
குத்பாக்கள் நீண்டு விடுவதனால் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் பெரிதும் அசௌகரியங்களை எதிர் நோக்குகின்றார்கள். சென்ற காலங்களில் பரீட்சை எழுதும் நிலையங்களுக்கும் பள்ளிவாசல்களுக்கும் நீண்ட தூரம் உள்ள இடங்களில் பரீட்சை எழுதும் மாணவர்கள் பெரிதும் அசௌகரியங்களை எதிர் நோக்க வேண்டி இருந்தது.
எனவே பரீட்சை எழுதும் மாணவர்களின் நலன் கருதி கதீப்மார்கள் தம் குத்பா பிரசங்கங்களை இயன்றளவு சுருக்கிக் கொள்ளுமாறும், பெற்றோர்கள் பிள்ளைகளின் கல்வி விடயத்தில் உதவியாக இருந்து சிறந்த பெறுபேருகளை பெற வழி செய்யுமாறும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உமலா வேண்டிக் கொள்கிறது.
அஷ்-ஷைக் எம்.எம்.ஏ முபாறக்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
கருத்துகள்
கருத்துரையிடுக