துப்பாக்கிப் பிரயோக சம்பவம் தொடர்பில், கோட்டாபய ராஜபக்ஷ அதிருப்தி வெளியிட்டார்.


முன்னாள் அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்கவின் பாதுகாவலர்களால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும்
துப்பாக்கிப் பிரயோக சம்பவம் தொடர்பில் தான் கவலையடைவதாக ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் நிரூபிக்கப்படுமாயின், உரிய அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுப்பார்கள் என தாம் நம்புவதாக கோட்டாபய குறிப்பிட்டுள்ளார்.

கினிகத்தேன பொலிஸ் பிரிவில் பொல்பிட்டிய பிரதேசத்தில் நேற்று மாலை  7.30 மணியளவில் துப்பாக்கிச்
சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றது அறிந்ததே.


பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க பயணித்த வாகனத்தினை வழிமறித்து சிலர் தடை ஏற்படுத்திய  நிலையில்,  பின்னால் வந்த வாகனத்தில் இருந்த மெய்ப்பாதுகாவலர்களால் இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு அதில்  2 பேர் காயமடைந்து தெலிகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கரவனெல்லை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.

சம்பவம் தொடர்பில் கினிகத்தேன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வந்த நிலையில் , பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்கவின் மெய்ப்பாதுகாவலர்கள் 2 பேர் பொலிசாரால் கைது செய்யப் பட்டுள்ளனர்.

இது தொடர்பில், தனது டுவிட்டர் சமூக வலைத்தளத்தில் பதிவொன்றையும் அவர் இட்டுள்ளார்.

அந்த பதிவில், “முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்கவின் பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட துப்பாக்கி சூடு தொடர்பில் வருத்தமடைகின்றேன். இந்த சம்பவம் உண்மையாக இருந்தால் இது தொடர்பில் உரிய பிரிவுகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளும். சட்டம் மற்றும் சமாதானத்தை பாதுகாப்பதனை முதன்மையாக கருதும் எனது கொள்கையை மீண்டும் உறுதி செய்கிறேன்” என அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Comments

popular posts

சீதனம். ஹறாமானதா? முபாறக் மௌலவியின் விளக்கம்.

அர‌பா நாளிலேயே அற‌பா நோன்பு நோற்க‌ வேண்டும்

ஹக்கீமை சமூக துரோகி என குற்றம் சாட்டி அரசியல் செய்யும் முஸர்ரப்