ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டார்...!!!! ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். சிரிகொத்தவில் உள்ள கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தன் உறுப்பினர்களுக்கு புதிய பதவி நிலைகளை நியமித்தது. கட்சியின் பொதுச் செயலாளராக பணியாற்றிய அகில விராஜ் கரியவாசம் ஐ.தே.க உதவித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னர் உதவித் தலைவராக ரவி கருணநாயக்க காணப்பட்டார். அகில விராஜ் கரியவாசம் பதவியை ஏற்றுக்கொண்டு, ஐ.தே.க புதிய பொதுச் செயலாளராக பாலித ரங்க பண்டாராவை நியமித்தார். ஐ.தே.க வின் உறுப்பினர் வஜிர அபேவர்தனே தவிசாளராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார், ஏ.எஸ்.எம் மிஸ்பா பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய நியமனங்கள் இருந்தபோதிலும், முன்னாள் பிரதமர் ரனில் விக்கிரமசிங்கவே ஐ.தே.க தலைவராக நீடிப்பார். துணைத் தலைவர் ருவன் விஜேவர்தனவும் தனது பதவியில் தொடருவார்.
முன்னாள் அமைச்சர் றிஷார்ட் பதியுதீன் மற்றும் முன்னாள் எம் பி நவவி
ஆகியோர் முந்தல் , கனமூல பகுதியில் மக்களை சந்திக்க சென்று திரும்பியபோது அவர்கள் சென்ற வாகனத் தொடரணி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சில இடங்களில் ரயர்கள் எரிக்கப்பட்ட நிலை இருந்ததால் வாகனங்களை திருப்பி மெதுவாக வரும்போது இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக நவவி தெரிவித்தார்.
பொலிஸார் உடனடியாக விரைந்து பாதுகாப்பை உறுதிப் படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
- madawalanews
Comments
Post a comment