நாடு வறுமையில் உள்ளது. வறுமையில் தள்ளிவிட்டார்கள். ஆனால் நாட்டை ஆட்சி செய்தவர்கள் வறுமையிலா உள்ளனர்?

இந்த நாட்டை செய்ய முடியாவிட்டால் உலகில் உள்ள எந்த ஒரு நாட்டையும் செய்ய முடியாது என அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

பிலியந்தலை பகுதியில் நேற்று (03) நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தின் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அனுர குமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், இந்த நாட்டை செய்வோம். செய்ய முடியும். நீங்கள் எங்காவது கேள்விபட்டிருக்கிறீர்களா திருடன் ஒருவர் செய்த நாடு? திருடன் நாட்டை மட்டுமல்ல, வீட்டில் திருடும் கணவன் ஒருவன் இருந்தால் வீட்டுக்கு கூட விருத்தி இருக்காது.

இன்று எங்கள் நாட்டுக்கு என்ன நடந்து உள்ளது. நாடு வறுமையில் உள்ளது. வறுமையில் தள்ளிவிட்டார்கள். ஆனால் நாட்டை ஆட்சி செய்தவர்கள் வறுமையிலா உள்ளனர்.

உலகில் வறுமையான நாடுகள் உள்ளன. அங்கு ஆட்சியாளர்களும் வறுமையில் தான் உள்ளனர்.

எனவே இந்த நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்ல வேண்டுமானால் திருட்டு அநியாயங்களில் இருந்து விடுப்பட்ட ஆட்சி ஒன்றை அமைக்க வேண்டும்.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்