எல்லோருக்கும் பொதுவிதியான மரணம், நூறுல்ஹக்கை பிரித்துவிட்டது" - மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் அனுதாபம்! ஊடகப்பிரிவு- பன்னூலாசிரியர் நூறுல்ஹக் அவர்கள் இறையடி சேர்ந்த செய்தியால், கடும் கவலையடைந்துள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். அன்னாரின் மறைவு குறித்து அவர் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "எழுத்துப் பணியில் ஓயாது உழைத்துக் கொண்டிருந்த ஒரு நண்பனை நான் இழந்துவிட்டேன். அவரது இடைவௌியால், முஸ்லிம் சமூகத்தின் தனிப்பெரும் திறமையில் வெற்றிடம் ஏற்பட்டுவிட்டது. அரசியல், சமூகவியல், இலக்கிய வௌிகளில் மர்ஹூம் நூறுல்ஹக்கின் ஆளுமைகள் பளிச்சிடுவதை அன்னாரின் படைப்புக்களில் பார்க்க முடியும். முஸ்லிம் பூர்வீகம் பற்றி மிகத் தௌிந்த சிந்தனைகளில் அவர் பணியாற்றியவர். சமூக, அரசியல் தலைமைகளை வழிகாட்டும் அளவுக்கு அவரது சிந்தனைகள் இருந்ததை என்னால் பெருமையுடன் ஏற்றுக்கொள்ள முடியும். கொழும்புக்கு வரும் நேரமெல்லாம் நேரடியாகவோ அல்லது தொலைபேசியிலோ என்னைத் தொடர்புகொள்ளும் அவர், முஸ்லிம் சமூகத்தின் சமகால, நிகழ்கா
பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த பின்னர், இலங்கை காவலில் உள்ள அனைத்து இந்திய மீனவர் படகுகளையும் விடுவிப்பதாக இலங்கை ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.
இந்தியாவுக்கான விஜயமொன்றை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி
கோட்டாபய ராஜபக்ச,புதுடில்லியில் சற்றுமுன்னர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தவேளை மேற்படி முடிவை வழங்கினார்.
சந்திப்பு குறித்து ட்விட்டரில் கருத்து வெளியிட்டுள்ள மோடி ,
” தனது முதல் வெளிநாட்டு பயணத்தை மேற்கொண்டு இலங்கை ஜனாதிபதி இந்தியா வந்துள்ளதை வரவேற்கிறேன்.
அவரது வருகை இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான பிணைப்புகளை வலுப்படுத்த உதவுமென நம்புகிறேன் ” என குறிப்பிட்டுள்ளார்.
Comments
Post a comment