தமது கட்சிக்கு கிடைத்துள்ள வாக்குகள் தொடர்பில் மகிழ்ச்சியடைய முடியாது - அனுர குமார

ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க சார்பில், தேசிய மக்கள் சக்தி ஊடக அறிக்கையொன்றை
இன்று வௌியிட்டது.

தேசிய மக்கள் சக்தி என்ற ரீதியில், ஜனாதிபதி தேர்தலில் தமது கட்சிக்கு கிடைத்துள்ள வாக்குகள் தொடர்பில் மகிழ்ச்சியடைய முடியாது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனை விடவும் அதிக வாக்குகளை எதிர்பார்த்த போதிலும், அதனை பெற்றுக்கொள்ள முடியாது போனதை ஏற்க வேண்டும் எனவும், விரிவான மக்கள் செயற்பாட்டின் ஆரம்பத்தை உறுதிப்படுத்த முடியாது போயுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இனவாதம் மற்றும் அச்சுறுத்தலுக்கு பதிலாக, தேசிய ஒற்றுமையுடனான தேர்தல் மேடையை உருவாக்குவதற்கு தமது பிரிவினருக்கு முடிந்ததாக தேசிய மக்கள் சக்தி குறிப்பிட்டுள்ளது.

மக்கள் மீதான நம்பிக்கை தோல்வியடைந்துள்ள போதிலும், வெற்றிக்காக அயராது பாடுபடுவதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்