முன்னாள் அமைச்சர் அதாவுல்லாவின் "சூட்டை", நான் எறிந்த "நீர்" குளிர்மை படுத்தி இருக்கும்- மனோ கணேசன்

முன்னாள் அமைச்சர் அதாவுல்லாவின் "சூட்டை", நான் எறிந்த "நீர்" குளிர்மை படுத்தி இருக்கும் என முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.

மின்னல் நிகழ்ச்சியில் நடைபெற்ற இன்றைய சம்பவம் தொடர்பில் தனது முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றை இட்டுள்ள முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் இதனை தெரிவித்துள்ளார்.

அவரின் முகநூல் பதிவில் மேலும் தெரிவித்துள்ளதாவது, மின்னல் நிகழ்ச்சியின், 6 மணி முதல் 7 மணி வரையிலான "நேரடி" ஒளிபரப்புக்கு பின் 8 மணி வரையிலான "பதிவு செய்யப்பட்ட" நிழ்ச்சியின் போது தோட்டத் தொழிலாளர் தொடர்பில் பொதுவெளியில் பயன்படுத்த கூடாத வார்த்தையை, முன்னாள் அமைச்சர் அதாவுல்லா பயன்படுத்தினார்.

அதை நான் கண்டித்த போது மீண்டும், மீண்டும் சத்தம் போட முனைந்த அதாவுல்லா மீது என் மேஜையில் இருந்த குவளை நீரை நான் வீசி எறிந்தேன்.

நிகழ்ச்சிக்கு தாமதமாக வந்துவிட்டு, வந்தது முதல் நிகழ்ச்சி நடத்துனரையும், கலந்துக் கொள்ள வந்த என்னையும், அமைச்சர் தேவானந்தாவையும் இடையூறு செய்து கொண்டே இருந்து, இந்நாட்டின் எல்லா பிரச்சினைக்கும் சிறுபான்மை அரசியல்வாதிகளே காரணம் என்று, முழுக்க முழுக்க பெரும்பான்மை நிலைப்பாடுகளை நியாயப்படுத்தி எரிச்சல் ஊட்டிக்கொண்டிருந்த, முன்னாள் அமைச்சர் அதாவுல்லாவின் "சூட்டை", நான் எறிந்த "நீர்" குளிர்மை படுத்தி இருக்கும் என எண்ணுகிறேன்.

என்னிடம் விளையாட வேண்டாம், எந்த காரணத்துக்காகவும் பொதுவெளியில் பயன்படுத்தக்கூடாத வார்த்தையை பயன்படுத்த வேண்டாம் என சொல்லி விட்டு வந்தேன். நடந்தவைகளை "எடிட்" செய்யாமல் அப்படியே ஒளிபரப்பும்படி சக்தி மின்னல் நிகழ்ச்சி தயாரிப்பாளரிடமும் சொன்னேன் என முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்