ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டார்...!!!! ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். சிரிகொத்தவில் உள்ள கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தன் உறுப்பினர்களுக்கு புதிய பதவி நிலைகளை நியமித்தது. கட்சியின் பொதுச் செயலாளராக பணியாற்றிய அகில விராஜ் கரியவாசம் ஐ.தே.க உதவித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னர் உதவித் தலைவராக ரவி கருணநாயக்க காணப்பட்டார். அகில விராஜ் கரியவாசம் பதவியை ஏற்றுக்கொண்டு, ஐ.தே.க புதிய பொதுச் செயலாளராக பாலித ரங்க பண்டாராவை நியமித்தார். ஐ.தே.க வின் உறுப்பினர் வஜிர அபேவர்தனே தவிசாளராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார், ஏ.எஸ்.எம் மிஸ்பா பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய நியமனங்கள் இருந்தபோதிலும், முன்னாள் பிரதமர் ரனில் விக்கிரமசிங்கவே ஐ.தே.க தலைவராக நீடிப்பார். துணைத் தலைவர் ருவன் விஜேவர்தனவும் தனது பதவியில் தொடருவார்.
#முஸ்லீம்_தலைவர்களே_நல்லாட்சி #அரசாங்கத்தை_நாங்கள் #இதுக்குத்தான்_உருவாக்கினமா?
----------------------------------------------------------
நியாயமான பதிலை தாருங்கள் நீங்கள் சொல்கின்ற வேட்பாளருக்கு நாங்கள் வாக்குகளை வழங்குகிறோம்.
இனவாத செயற்பாடுகள் முஸ்லிம் சிறுபான்மை சமூகத்துக்கு எதிராக இனவாதிகளால் நடக்கக்கூடாது என்று ஐக்கிய தேசிய முன்னணி தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்திற்கு அன்று 2015ஆம் ஆண்டு #அன்னம்_சின்னத்துக்கு வாக்குகளை வழங்கி உருவாக்கியதன் பயனாக முஸ்லிம் சமூகம்
அனுபவித்த விளைவுகள்
#கண்டி_திகன_கிந்தோட்டை
#அம்பாறை_மினுவாங்கொடை #குருநாகல் போன்ற பிரதேசங்களில் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்களை சொத்துக்களும் பள்ளிவாசல்களும் அளிக்கப்பட்ட போது ஆட்சியிலிருந்த அரசாங்கம் ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம்
சட்ட ஒழுங்கு அமைச்சராக இருந்தவர் ரணில் விக்கிரமசிங்க அந்த அரசாங்க அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர் சஜித் பிரேமதாசா
அன்று இந்த இனவாத தாக்குதலுக்கு ஒரு #கண்டன_அறிக்கையை அல்லது #பாராளுமன்றத்தில்_கண்டனம் #தெரிவித்து #பேசாத நபர்தான் #சஜீத்
தற்பொழுதாவது கண்டி திகன அம்பாறை மினுவாங்கொடை குருநாகல் தாக்குதல் இனவாதிகளின் கண்டிக்கத்தக்கது என்று இவ்வாறான தாக்குதல்கள் நான் ஆட்சிக்கு வந்தால் நடைபெற மாட்டாது என்று சஜித் பிரேமதாசவால் சொல்ல முடியுமா?
அல்லது மஹிந்த தரப்பினர் அனைத்தையும் செய்கின்றனர் எங்களால் ஒன்றும் செய்ய முடியாமல் இருக்கின்றது என்று #முதுகெலும்பில்லாத #அரசாங்கத்தையும் #உருவாக்குவதற்காக நாங்கள் வாக்குகளை வழங்க வேண்டும்.
முஸ்லிம் சமூகமும் முஸ்லிம் தலைவர்களும் சிந்தியுங்கள் மீண்டும் முதுகெலும்பில்லாத அரசாங்கத்தை முஸ்லிம் சமூகம் உருவாக்கி நீங்கள் பாராளுமன்றத்தில் கண்ணீர் வடித்து அரசாங்கத்தை குறை கூறிவிட்டு அமைச்சரவையில் சந்தோசமாக உங்கள் சுகபோக வாழ்க்கையை வாழ்வதற்கு எங்களால் அனுமதிக்க முடியாது இந்த கேள்விக்கு பதில் தாருங்கள்
Comments
Post a comment