ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டார்...!!!! ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். சிரிகொத்தவில் உள்ள கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தன் உறுப்பினர்களுக்கு புதிய பதவி நிலைகளை நியமித்தது. கட்சியின் பொதுச் செயலாளராக பணியாற்றிய அகில விராஜ் கரியவாசம் ஐ.தே.க உதவித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னர் உதவித் தலைவராக ரவி கருணநாயக்க காணப்பட்டார். அகில விராஜ் கரியவாசம் பதவியை ஏற்றுக்கொண்டு, ஐ.தே.க புதிய பொதுச் செயலாளராக பாலித ரங்க பண்டாராவை நியமித்தார். ஐ.தே.க வின் உறுப்பினர் வஜிர அபேவர்தனே தவிசாளராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார், ஏ.எஸ்.எம் மிஸ்பா பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய நியமனங்கள் இருந்தபோதிலும், முன்னாள் பிரதமர் ரனில் விக்கிரமசிங்கவே ஐ.தே.க தலைவராக நீடிப்பார். துணைத் தலைவர் ருவன் விஜேவர்தனவும் தனது பதவியில் தொடருவார்.
அம்பாறை தமிழ் மக்களின் இருப்பை பறிப்பதில், மாற்று சமூகத்தினர் கங்கணம் கட்டிக் கொண்டு இருக்கின்றனர். - கோடீஸ்வரன் எம்பி
தமிழ் சமூகத்தின் சொத்தாக கல்வி இருக்கின்றது. எமது சமூகம் கல்வியின் மூலமே முன்னேற்றம் கண்ட ஒன்று இனிவரும் காலங்களில் கல்வியில் பாரிய வளர்ச்சியினை அடைய வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
காரைதீவு இராமகிருஷ்ண ஆண்கள் பாடசாலையில் இன்று -28- இடம்பெற்ற நிகழ்வின் போது கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
அம்பாறை மாவட்ட தமிழ் மக்களின் இருப்பை பறிப்பதில் மாற்று சமூகத்தினர் கங்கணம் கட்டிக் கொண்டு இருக்கின்றனர். தமிழ் சமூகத்தின் சொத்தாக கல்வி இருக்கின்றது.
எமது சமூகம் கல்வியின் மூலமே முன்னேற்றம் கண்ட ஒன்று. இனிவரும் காலங்களில் கல்வியில் பாரிய வளர்ச்சியினை அடைய வேண்டும்.
இனிவரும் தேர்தல்களில் அம்பாறை தமிழர்கள் ஒருமித்து பயணிக்க வேண்டும். அப்போதுதான் எமது நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் ஆனாலும் சரி. மாகாண சபை பிரதிநிதியாகிலும் சரி. உள்ளூராட்சி பிரதிநிதி ஆயினும் எமது பிரதிநிதித்துவத்தை தக்க வைத்து கொள்வதன் மூலம் எமது மக்களின் குரலாக ஒலிக்க முடியும்.
இல்லாது போனால் அம்பாறை மாவட்ட தமிழர்களின் இருப்பு கேள்விக்குறியாவதோடு மாற்று சமூகத்திடம் மண்டியிட்டு வாழ வேண்டிய சூழல் ஏற்படும்.
மாற்று சமூகத்திடம் ஆண்டான் அடிமையாக வாழ்வதா? இல்லை எமது இருப்பை தக்க வைத்து கொள்வதா? என்பதனை நாம் உணர்ந்து செயற்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Comments
Post a comment