ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டார்...!!!! ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். சிரிகொத்தவில் உள்ள கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தன் உறுப்பினர்களுக்கு புதிய பதவி நிலைகளை நியமித்தது. கட்சியின் பொதுச் செயலாளராக பணியாற்றிய அகில விராஜ் கரியவாசம் ஐ.தே.க உதவித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னர் உதவித் தலைவராக ரவி கருணநாயக்க காணப்பட்டார். அகில விராஜ் கரியவாசம் பதவியை ஏற்றுக்கொண்டு, ஐ.தே.க புதிய பொதுச் செயலாளராக பாலித ரங்க பண்டாராவை நியமித்தார். ஐ.தே.க வின் உறுப்பினர் வஜிர அபேவர்தனே தவிசாளராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார், ஏ.எஸ்.எம் மிஸ்பா பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய நியமனங்கள் இருந்தபோதிலும், முன்னாள் பிரதமர் ரனில் விக்கிரமசிங்கவே ஐ.தே.க தலைவராக நீடிப்பார். துணைத் தலைவர் ருவன் விஜேவர்தனவும் தனது பதவியில் தொடருவார்.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்திற்குள் இன்று மற்றும் நாளை புதன்கிழமை எந்தவொரு மாவீரர் நிகழ்வினையும் நடத்தக்கூடாது என்கிற அதிரடி உத்தரவு இன்று வெளியாகியுள்ளது.
யாழ். பல்கலைக்கழக தகுதிவாய்ந்த அதிகாரியான கந்தசாமியினால் மேற்படி தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக எழுத்துமூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் நேற்று நள்ளிரவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்தநாள் கொண்டாட்டம் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் பிரத்தியேக இடமொன்றில் கொண்டாடப்பட்ட புகைப்படங்கள் மற்றும் செய்திகள் இன்று வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Comments
Post a comment