ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டார்...!!!! ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். சிரிகொத்தவில் உள்ள கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தன் உறுப்பினர்களுக்கு புதிய பதவி நிலைகளை நியமித்தது. கட்சியின் பொதுச் செயலாளராக பணியாற்றிய அகில விராஜ் கரியவாசம் ஐ.தே.க உதவித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னர் உதவித் தலைவராக ரவி கருணநாயக்க காணப்பட்டார். அகில விராஜ் கரியவாசம் பதவியை ஏற்றுக்கொண்டு, ஐ.தே.க புதிய பொதுச் செயலாளராக பாலித ரங்க பண்டாராவை நியமித்தார். ஐ.தே.க வின் உறுப்பினர் வஜிர அபேவர்தனே தவிசாளராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார், ஏ.எஸ்.எம் மிஸ்பா பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய நியமனங்கள் இருந்தபோதிலும், முன்னாள் பிரதமர் ரனில் விக்கிரமசிங்கவே ஐ.தே.க தலைவராக நீடிப்பார். துணைத் தலைவர் ருவன் விஜேவர்தனவும் தனது பதவியில் தொடருவார்.
சகல இனங்களுக்கிடையிலும் ஐக்கியத்தை ஏற்படுத்தும் வகையில் ஜனாதிபதி கோத்தாபய செயற்படுவார் - ரிஷாத் நம்பிக்கை
புதிய ஜனாதிபதி சகல இனங்களுக்கிடையிலும் சமாதானம், ஐக்கியம், சகோதரத்துவம், நம்பிக்கை மற்றும் பாதுகாப்பு ஆகியன நிலைகொள்ளும் வகையில் செயற்படுவாரென நம்புகின்றோம் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுக்கு வாழ்த்துத் தெரிவித்து அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் நிறைவேற்று ஜனாதிபதியாக நாட் டின் பெரும்பான்மை மக்களின் ஆதரவோடு தேர்ந்தெடுக்கப்பட்ட கோத்தபாய ராஜபக்ஷ வுக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸினதும் எனது மக்களினதும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஜனாதிபதி தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணி வேட்பாளர் சஜித் பிரமேதாசவுக்கு ஆதரவளித்து, வாக்களித்த அனைவருக்கும் எனது விஷேட நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.
புதிய ஜனாதிபதி சகல இனங்களுக்கிடையிலும் சமாதானம், ஐக்கியம், சகோதரத்துவம், நம்பிக்கை மற்றும் பாதுகாப்பு ஆகியன நிலைகொள்ளும் வகையில் செயற்படுவாரென நம்புகின்றோம்.
நமது நாடென்ற வகையில் இன ஐக்கியத்துடனும் சகோதர மனப்பாங்குடனும் அனைத்து சவால்களையும் எதிர்கொண்டு நாட்டை அபிவிருத்தியின்பால் இட்டுச் செல்ல புதிய ஜனாதிபதிக்கு வலிமையும் மனோ தைரியமும் கிடைக்க வேண்டுமென பிரார்த்திக்கின்றேன்.
- madawala news
Comments
Post a comment