நான்கு இல‌ட்சத்துக்கு மேற்ப‌ட்ட‌ சிறுபான்மை வாக்குக‌ளை கோட்டாவுக்கு பெற்றுக் கொடுப்போம் என நாம் அன்று கூறிய‌து இன்று உண்மையாகியுள்ள‌து - முபாரக் அப்துல் மஜீத்

ஜ‌னாதிப‌தி கோட்டாப‌ய‌ ராஜ‌ப‌க்ஷ‌வுக்கு த‌மிழ், முஸ்லிம் மக்கள் கிட்ட‌த்த‌ட்ட‌ நான்கு இல‌ட்ச‌த்துக்கு மேற்ப‌ட்ட‌ வாக்குக‌ளை அளித்துள்ள‌தால் இந்த‌ மாபெரும் வெற்றியில் த‌மிழ், முஸ்லிம் மக்க‌ளும் உள்ள‌மையால் வாக்க‌ளித்த‌ சிறுபான்மை ம‌க்க‌ளுக்கு ஸ்ரீ ல‌ங்கா பொதுஜ‌ன‌ பெர‌முன‌வின் ப‌ங்காளிக்க‌ட்சியும், முத‌லில் ஒப்பந்த‌ம் செய்து ப‌கிர‌ங்க‌மாக‌ இணைந்த‌ முத‌லாவ‌து முஸ்லிம் க‌ட்சியுமான‌ உல‌மா க‌ட்சி ந‌ன்றிகளை தெரிவித்துள்ள‌து.

இது ப‌ற்றி க‌ட்சித்த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் தெரிவித்த‌தாவ‌து, வ‌ட‌க்கு கிழ‌க்கை பொறுத்த‌வ‌ரை கோட்டாவுக்கு அளிக்க‌ப்ப‌ட்ட‌ வாக்குக‌ளை பின்வ‌ருமாறு காண‌லாம்.

கல்முனை 7,286,
சம்மாந்துறை 7,151,
அக்கறைப்பற்று (பொத்துவில்) 20,116,
மட்டக்களப்பு 38,460,
மூதூர் 4,925,
திருகோணமலை சுமார் 10,000
யாழ்ப்பாணம் 23,261,
வன்னி 26,105,
பேருவலை 20,000,
நுவரெலிய 60,000,
அக்குரனை 2,000.

என மொத்தமாக சுமார் 225,000 எளிதாக பிரித்தரியக்கூடிய சிறுபான்மை இன வாக்குகள் கோத்தாவுக்கு கிடைத்துள்ளன.

இது தவிர, பிரித்து பார்க்க முடியாத ஆங்காங்கே உள்ள கோத்தாபய ஆதரவாளர்களான சிறுபான்மை இன மக்களின் வாக்குக‌ளும் உள்ள‌ன‌. 

அளிக்கப்பட்ட சிறுபான்மை இன வாக்குகளில் அரைவாசி வாக்குகளை கோத்தாபய ராஜ‌ப‌க்ஷ‌ பெற்றுள்ளார் என்ப‌தே உண்மையாகும். தேர்த‌ல் அறிவிக்க‌ப்ப‌ட்ட‌ உட‌னே உல‌மா க‌ட்சியால் க‌ல்முனையில் ந‌ட‌த்த‌ப்ப‌ட்ட‌ ஊட‌க‌ மாநாட்டில் நான்கு இல‌ட்சத்துக்கு மேற்ப‌ட்ட‌ சிறுபான்மை வாக்குக‌ளை கோட்டாவுக்கு பெற்றுக் கொடுக்கும் வ‌கையில் பிர‌ச்சார‌த்தை மேற்கொள்வோம் என‌ நாம் அன்று கூறிய‌து இன்று உண்மையாகியுள்ள‌து.

ஜ‌னாதிப‌தி கோட்டாப‌ய‌வுக்கு சிறுபான்மை இன மக்களின் வாக்குகளை த‌விர்த்து பார்த்தால் 6,424,255 வாக்குகளை பெற்று, அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் 48% வாக்குகளை பெற்றிருப்பார்.

ஆகவே, ஜ‌னாதிப‌தி கோட்டாப‌யவை முதல் சுற்றிலேயே வெற்றி பெற வைத்து, அவரை வெற்றி வாகை சூடவைத்ததில் தேசமெங்கும் பரவியிருக்கும் சிறுபான்மை இன மக்களின் வாக்குகள் என்ப‌தில் பெருமைப்ப‌டுகிறோம் என தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்