எல்லோருக்கும் பொதுவிதியான மரணம், நூறுல்ஹக்கை பிரித்துவிட்டது" - மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் அனுதாபம்! ஊடகப்பிரிவு- பன்னூலாசிரியர் நூறுல்ஹக் அவர்கள் இறையடி சேர்ந்த செய்தியால், கடும் கவலையடைந்துள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். அன்னாரின் மறைவு குறித்து அவர் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "எழுத்துப் பணியில் ஓயாது உழைத்துக் கொண்டிருந்த ஒரு நண்பனை நான் இழந்துவிட்டேன். அவரது இடைவௌியால், முஸ்லிம் சமூகத்தின் தனிப்பெரும் திறமையில் வெற்றிடம் ஏற்பட்டுவிட்டது. அரசியல், சமூகவியல், இலக்கிய வௌிகளில் மர்ஹூம் நூறுல்ஹக்கின் ஆளுமைகள் பளிச்சிடுவதை அன்னாரின் படைப்புக்களில் பார்க்க முடியும். முஸ்லிம் பூர்வீகம் பற்றி மிகத் தௌிந்த சிந்தனைகளில் அவர் பணியாற்றியவர். சமூக, அரசியல் தலைமைகளை வழிகாட்டும் அளவுக்கு அவரது சிந்தனைகள் இருந்ததை என்னால் பெருமையுடன் ஏற்றுக்கொள்ள முடியும். கொழும்புக்கு வரும் நேரமெல்லாம் நேரடியாகவோ அல்லது தொலைபேசியிலோ என்னைத் தொடர்புகொள்ளும் அவர், முஸ்லிம் சமூகத்தின் சமகால, நிகழ்கா
சலுகைகளை பெறும் நோக்கில் ஜனாதிபதியின் பெயரை பயன்படுத்துவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிக்கையொன்றை விடுத்துள்ள ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மோசடியில் ஈடுபட்டுவரும் சில தனி நபர்கள் மற்றும் குழுக்கள் தமக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாக தெரிவித்து, மக்களை ஏமாற்றி தவறாக சலுகைகளை பெற்றுக்கொள்ள முயற்சித்து வருவதாக சாட்சிகளுடன் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. பல்வேறு பதவிகள், நியமனங்கள், டென்டர்கள் போன்றவற்றை பெற்றுக்கொடுக்க உதவ முடியும் என அவர்கள் மக்களுக்கு தெரிவித்து வருகின்றனர். இவர்களில் சிலர் ஜனாதிபதிக்கு தங்களால் அழுத்தம் கொடுக்க முடியுமென்றும் தெரிவித்துள்ளதாக அறியக் கிடைத்துள்ளது.
எப்போதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட முறைமைகள் மற்றும் நடைமுறைகளுக்கேற்ப செயற்படுவதே ஜனாதிபதி ராஜபக்ஷ அவர்களின் உறுதியான கொள்கையாகும். நடைமுறைகளுக்கு புறம்பாக பதவிகள், நியமனங்கள், டென்டர்கள் ஆகியவற்றை வழங்குவதற்காக ஜனாதிபதி அவர்களை பயன்படுத்திக்கொள்ள எவருக்கும் முடியாது.
எனவே இத்தகைய மோசடிக்காரர்களை நம்பி ஏமாற வேண்டாமென ஜனாதிபதி அலுவலகம் மக்களுக்கு தெரிவித்துக்கொள்கின்றது. ஜனாதிபதி அவர்களின் பெயரைப் பயன்படுத்தி மக்களை ஏமாற்றி சலுகைகளை பெற்றுக்கொள்ள முயற்சிப்போருக்கு எதிராக சட்ட ரீதியாக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
Comments
Post a comment