உணவில் நத்தை இருந்தது கண்டுபிடிப்பு

கொழும்பிலுள்ள பிரபல உணவகம் ஒன்றில் மனித பாவனைக்கு பொருத்தமற்ற வகையில் உணவு பரிமாறப்பட்டமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதிய நேர உணவுக்காக பெற்றுக்கொள்ளப்பட்ட சோற்றுப் பொதியில் நத்தை இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உணவுகளை விநியோகிக்கும் நடமாடும் சேவையாக ஊபர் மூலம் பெற்றுக்கொள்ளப்பட்ட உணவுப்பொதியிலேயே நத்தை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு 7 இல் உள்ள பிரபல உணவகத்தில் இருந்து பெற்றுக்கொள்பட்ட உணவு பொதியில் நத்தை இருந்தமை தொடர்பில், பாதிக்கப்பட்டவர் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்துள்ளார்.

உணவின் ஒரு பகுதியை உட்கொண்ட பின்னரே நத்தை இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டதாகவும், மிகவும் அருவருப்பான அனுபவமாக இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்டவர், சம்பந்தப்பட்ட உணவகத்திற்கு சென்று நியாயம் கேட்டுள்ளார். இதன்போது உணவகத்தின் களஞ்சியத்திலிருந்து அரிசி பொதியில் நத்தைகள் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Comments

popular posts

මුස්ලිම් ස්වාධීන කණ්ඩායම්වල අරමුණ වන්නේ මුස්ලිම් ප්‍රජාවගේ ඡන්දය බිඳ දැමීමයි,

அரசாங்கம் இனவாதத்துடன் செயற்படுவதாகக்கூறும் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை

ஹக்கீமை சமூக துரோகி என குற்றம் சாட்டி அரசியல் செய்யும் முஸர்ரப்