முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி...!!!! இராஜதந்திர குழியில் வீழ்ந்தார் ஹக்கீம்...!! ( ஏ.எச்.எம்.பூமுதீன்) பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிற்கான விசேட இரவு விருந்துபசார நிகழ்வில் முகா தலைவர் ரவூப் ஹக்கீம் பங்குபற்றியமை முஸ்லிம்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஏற்பாட்டில் அலரி மாளிகையில் நேற்று (23) செவ்வாய்கிழமை இரவு இந்த விருந்துபசாரம் இடம்பெற்றது. இம்ரான் கான் நேற்று இலங்கை வந்தடைந்த வேளை - ஜனாஸா எரிப்புக்கு எதிராக , அரசாங்கத்தை மிகக் கடுமையாக தூற்றி - கொழும்பு காலிமுகத்திடலில் ஊர்வலம் போன ஹக்கீம் - அன்று மாலையே விருந்தில் கலந்துகொண்டமை - ஹக்கீமின் இரட்டை வேடத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது. இம்ரான் கான் - கட்டாய ஜனாஸா எரிப்பு விவகாரத்தை முடிவுக்கு கொண்டுவர அரசிடம் பேசுவார் என்ற எதிர்பார்ப்பு மற்றும் முஸ்லிம் கட்சிகளை சந்திப்பார் என்ற முஸ்லிம் சமுகத்தின் இரு எதிர்பார்ப்பும் தவிடுபொடியான நிலையில் - ஹக்கீம் , விருந்தில் கலந்துகொண்டமை - அவர், அரசின் அடிமை என்பதையே துல்லியமாக காட்டி நிற்கின்றது. ஹக்கீம் - விருந்தில் கலந்து கொண்டதன் மூலம்
மதில் மேல் பூனையாக நிற்கும் ஹரீஸ் எம் பி சமூகத்துக்காக துணிச்சலான முடிவெடுப்பாரா? -முபாரக் அப்துல் மஜித்
ஜனாதிபதி தேர்தல் காலத்தின் போது ஹரீஸ் எம் பிக்கு கூறினேன் கோட்டா வெல்வது உறுதி என்றும் அவருக்கு ஆதரவாக களத்தில் குதிக்கும் படியும்.
இத்தனைக்கும் ஹரீஸ் எம் பி ரணிலை விட மஹிந்தவை பெரிதும் மதிக்கக்கூடியவராக இருந்தார். கல்முனை பிரச்சினைகளுக்கெல்லாம் காரணம் தமிழ் கூட்டமைப்புக்கு ஆடும் ஐ தே தான் என்பதில் உறுதியாக இருந்தார். தலைவர் ரிசாத் பதியுதீன் மஹிந்த பக்கம் வந்தால் தானும் வரத்தயார் என்ற நிலைப்பாட்டில் இருந்தார்.
அரசியல் என்றால் கரணம் தப்பினால் மரணம் என்பது போன்றதுதான். நாம் எடுக்கும் முடிவு என்பது சில நேரம் நமக்கும் படு தோல்வியை தரலாம், சில வேளை பெரு வெற்றியை தரலாம். எதையும் தாங்குபவன்தான் உண்மையான அரசியல்வாதி. நாம் எடுக்கும் முடிவு நமக்கு தோல்வியாக அமைந்தாலும் சமூகத்துக்கு வெற்றியாக இருந்தால் அது நமக்கும் வெற்றி என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
இந்த வகையில் தேர்தல் காலத்தில் எனது அழைப்பை ஏற்று ஹரீஸ் எம் பி கோட்டாவுக்கு ஆதரவளித்திருந்தால் இந்நேரம் கெபினட் அமைச்சராகியிருப்பார். கிழக்கு முஸ்லிம்களுக்கு மிகப்பெரும் விமோசனம் கிடைத்திருக்கும். நிச்சயம் கோட்டா வெல்வார் என்று நன்கு தெரிந்தும் ஹரீஸ் முடிவெடுக்காமை மூலம் அவர் அமைச்சர் அஷ்ரபின் நேரடிப்பாசறையில் வளர்ந்தவர் அல்ல என்பதை நிரூபித்து விட்டார்.
சில வேளை கோட்டா தோற்றிருந்தாலும் ஹரீஸ் எம் பியாக இருந்திருப்பார். அவருக்கு அமைச்சு கொடுக்க கூடாது என ஹக்கீம் தடை போட்டிருப்பார். ஆனாலும் ஹரீஸுக்கு அமைச்சு பதவி தூசுக்கு சமன் என்பது ஏற்கனவே தெரிந்த விசயம்.
உண்மையில் ஹரீஸ் இது விடயத்தில் முடிவெடுப்பதில் கோழையாகியமை கவலை தருகிறது. வெற்றியோ தோல்வியோ சமூகத்துக்காக துணிச்சலாய் முடிவெடுப்பது தலைவர் அஷ்ரபின் பாணி. அதனை நான் எப்போதும் பின் பற்றுகிறேன். ஹரீஸ் எம் பி இனியாவது தலைவரை பின் பற்றி நல்ல முடிவெடுக்க வேண்டும். ஹக்கீமின் முஸ்லிம் காங்கிரசால் முஸ்லிம் சமூகம் அனுபவித்த இன்னல்கள் போதும்.
- முபாறக் அப்துல் மஜீத் மௌலவி
உலமா கட்சித்தலைவர்.

Comments
Post a comment