அமைச்சர் நிமலின், தூக்கத்திற்கு என்ன காரணம்?

அமைச்சர் நிமல் சிறிபாலே டி சில்வா அவரது தூக்கத்தின் பின்னால் மனதை உலுக்கும் சம்பவம் ஒன்று இருக்கிறது.,

பாராஞமன்றத்தில் தூங்கிய பல அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் புகைப்படங்க்ளை பார்த்து இருக்கின்றோம் அவர்களில் அமைச்சர் நிமல் சிறிபாலா டி சில்வா. வித்தியாசமானவர் அதனால் நம்மில் பலர் அவரை சமூக வளைத்தளங்களில் கேலி செய்தோம்.
இந்த சம்பவம் 1996 இல் இடம்பெற்றது.

யாழ்ப்பாணத்தில் சிவில் நிர்வாகம் நிறுவப்படுவதற்கு முன்னர், யாழ்ப்பாண பிராந்தியத்தில் ஆய்வுகளை மேற்கொள்ள அமைச்சர்கள் நியமிக்கப்பட்டனர்.

குறிப்பாக யாழ்ப்பாணத்தின் மறுவாழ்வுக்காக ஒரு பணிக்குழு நியமிக்கப்பட்டது. அப்போதைய வீட்டுவசதி மற்றும் பொது பயன்பாட்டு அமைச்சராக இருந்தவர் நிமல் சிரிபாலா டி சில்வா.

கொஞ்சம் கொஞ்சமாக, #யாழ்ப்பாணத்தில் மக்களின் வாழ்க்கை தரம் உயர்ந்து வந்த காலகட்டம் அது, பொருளாதார வளர்ச்சி நடவடிக்கைகள், விவசாயம், பாதுகாப்பு என அனைத்தும் நிமல் சிரிபால டி சில்வாவின் அமைச்சின் கீழ் அசூர வளர்ச்சி கண்டது!

எனவே இதனை முறியடிக்க, இதற்கெல்லாம் பொறுப்பான அமைச்சர் நிமல் சிரிபாலா டி சில்வா மீது தற்கொலை குண்டு தாக்குதல் நடத்த புலிகள் முடிவு செய்தனர்.

LTTE யின் திட்டமிட்ட நிமல் சிரிபாலா டி சில்வாவின் மீதான தற்கொலைத் தாக்குதல், ஜூலை 4, 1996 அன்று நிகழ்த்தப்பட்டது. ஆனால் அதில் அமைச்சருடன் இருந்த இராணுவத்தின் மிக முக்கியமான அதிகாரிகளில் ஒருவரான 26 வயது நிரம்பிய பிரிகேடியர் ஆனந்த “ஹமங்கொட” என்பவரின் மரணத்திற்கு வழிவகுத்தது.

அதிர்ஷ்டவசமாக, அமைச்சர் நிமல் சிரிபாலா டி சில்வாவின் உயிருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை, ஆனால் அவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அதில் இருந்து அதிஷ்டவசமாக உயிர் தப்பினார் அமைச்சர்!

தலையில் ஏற்பட்ட பலத்த அடி தாக்குதல் காரணமாக ”Narcolepsy” எனும் பாதிப்பு காரணமாக அமைச்சர் இப்போது தூங்கிக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

அது மட்டுமல்லாமல், MRI scaning மூலம் அவரது தலையில் இந்த குண்டுகள் இன்னும் இருப்பதாக கூறப்படுகின்றது. 40 வருடங்கலுக்கு அதிகமாக அரசியல் அனுபவம் வாய்ந்த இவர் ஒரு சிறந்த அரசியல்வாதி என எல்லோராலும் கூறப்பட்டாலும் அதையும் தாண்டி மிகச் சிறந்த மனிதர் என அனைவராலும் அழைக்கப்படுகின்றது!

(Minister Nimal Siripala Silva was attacked in 1996 by the LTTE and received serious head injuries. His narcolepsy is a result of that.)

(Narcolepsy is a sleep disorder characterized by excessive sleepiness, sleep paralysis, hallucinations, and in some cases episodes of cataplexy (partial or total loss of muscle control, often triggered by a strong emotion such as laughter).

-source


Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்