Skip to main content

ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு

  ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டார்...!!!! ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். சிரிகொத்தவில் உள்ள கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தன் உறுப்பினர்களுக்கு   புதிய பதவி நிலைகளை   நியமித்தது. கட்சியின் பொதுச் செயலாளராக பணியாற்றிய அகில விராஜ் கரியவாசம் ஐ.தே.க  உதவித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னர்  உதவித் தலைவராக  ரவி கருணநாயக்க காணப்பட்டார். அகில விராஜ்  கரியவாசம் பதவியை ஏற்றுக்கொண்டு, ஐ.தே.க   புதிய பொதுச் செயலாளராக பாலித ரங்க  பண்டாராவை நியமித்தார். ஐ.தே.க  வின் உறுப்பினர் வஜிர அபேவர்தனே  தவிசாளராக  அங்கீகரிக்கப்பட்டுள்ளார்,  ஏ.எஸ்.எம் மிஸ்பா பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய நியமனங்கள் இருந்தபோதிலும், முன்னாள் பிரதமர் ரனில் விக்கிரமசிங்கவே  ஐ.தே.க  தலைவராக நீடிப்பார். துணைத் தலைவர் ருவன் விஜேவர்தனவும் தனது பதவியில் தொடருவார்.

பொதுஜ‌ன‌ பெர‌முன‌ இன‌வாத‌ க‌ட்சிய‌ல்ல‌ - முபாரக் அப்துல் மஜீத்

ஐக்கிய‌ தேசிய‌ க‌ட்சியால் த‌மிழ் முஸ்லிம் க‌ட்சிக‌ளை இணைத்து   கூட்ட‌மைப்பு அமைக்க‌ முடியாத‌ நில‌யில் ஸ்ரீல‌ங்கா சுத‌ந்திர‌ பொதுஜ‌ன‌ கூட்ட‌மைப்பு எனும் பெய‌ரில் 17 சிங்க‌ள‌, த‌மிழ், முஸ்லிம்  க‌ட்சிக‌ளை இணைத்து ஒப்ப‌ந்தம்  செய்த‌மை மூல‌ம் பொதுஜ‌ன‌ பெர‌முன‌ இன‌வாத‌ க‌ட்சிய‌ல்ல‌ என்ப‌தை காட்டியுள்ள‌து என‌ உல‌மா க‌ட்சி தெரிவித்துள்ள‌து.
இது ப‌ற்றி உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் தெரிவித்துள்ள‌து,

ஐக்கிய‌ தேசிய‌ க‌ட்சியுட‌ன் இணந்துள்ள‌ க‌ட்சிக‌ள் ஒன்றிணைந்து ஐக்கிய‌ தேசிய‌ முன்ன‌ணி என்ற‌ பெய‌ரில் ஒப்ப‌ந்த‌ம் செய்ய‌ப்போவ‌தாக‌ க‌ட‌ந்த‌ 2015 முத‌ல் ஐ தேக‌,  த‌ன்னுட‌ன் உள்ள‌ சிங்க‌ள‌, த‌மிழ், முஸ்லிம் க‌ட்சிக‌ளை ஏமாற்றி வ‌ருகிற‌து.

இந்த‌ ஜ‌னாதிப‌தி தேர்த‌லுக்கு முன்பும் முத‌லில் கூட்ட‌ணி அமைப்ப‌து பின்ன‌ர் ஜ‌னாதிப‌தி வேட்பாள‌ரை தெரிவு செய்வ‌து என‌ அமைச்ச‌ர் ம‌னோ அமைச்ச‌ர் ஹ‌க்கீம் போன்றோர் வீராப்பு பேசின‌ர். பின்ன‌ர் எந்த‌க்கூட்ட‌ணி ஒப்ப‌ந்த‌மும் இன்றி வேட்பாள‌ர் அறிவிக்க‌ப்ப‌ட்ட‌து.
ஆனால் ஸ்ரீ ல‌ங்கா பொதுஜ‌ன‌ பெர‌முண‌ த‌ன‌து வேட்பாள‌ரை அறிவிக்கு முன்பே முஸ்லிம் உல‌மா க‌ட்சி போன்ற‌ சிறுபான்மை க‌ட்சிக‌ளுட‌ன் புரிந்துண‌ர்வு ஒப்ப‌ந்த‌ம் செய்த‌து. அதே போல் இப்போது பாராளும‌ன்ற‌த்தை பிர‌திநிதித்துவ‌ம் செய்யும் ம‌ற்றும் ப‌திவு செய்ய‌ப்ப‌ட்ட‌ க‌ட்சிக‌ளுட‌ன் கூட்ட‌ணி அமைத்து ஒப்ப‌ந்த‌ம் செய்துள்ள‌து.

சிறுபான்மை ச‌மூக‌த்தின் வாக்குக‌ள் எம‌க்கு தேவையில்லை என‌ கோட்டாப‌ய‌ ராஜ‌ப‌க்ஷ‌ சொன்ன‌தாக‌ பொய்க‌ளை ப‌ர‌ப்பி விட்டோருக்கு, தைரிய‌மாக‌ சிறுபான்மை க‌ட்சிக‌ளுட‌ன் ஒப்ப‌ந்த‌ம் செய்து கூட்ட‌ணி அமைத்துள்ள‌த‌ன் மூல‌ம் அக்க‌ட்சி முதுகெலும்புள்ள‌ தைரிய‌மான‌ க‌ட்சி என்ப‌து வெளிக்காட்ட‌ப்ப‌ட்டுள்ள‌து.

த‌ம்முட‌ன் இருக்கும் முஸ்லிம் த‌மிழ் க‌ட்சித்த‌லைவ‌ரின் பெய‌ரைக்கூட‌ விழிக்க‌க்கூட‌ அச்ச‌ப்ப‌ட்டு அத‌னை த‌விர்த்த‌ ச‌ஜித் பிரேம‌தாச‌ வெற்றி பெற்றால் அவ‌ரால் சிங்கள‌ இன‌வாதிக‌ளை எதிர்த்து ஒரு போதும் சிறுபான்மை ம‌க்க‌ளுக்கு ந‌ன்மை செய்ய‌ முடியாது என்ப‌தை இத‌ன் மூல‌ம் தெளிவாகிற‌து.
அதே நேர‌ம் சிங்க‌ள‌ ம‌க்க‌ளின் மிக‌ அதிக‌ ஆத‌ர‌வுத்த‌ள‌த்தை கொண்ட பொதுஜ‌ன‌ பெர‌முன‌, சிறுபான்மை க‌ட்சிக‌ளுட‌ன் ப‌கிர‌ங்க‌மாக‌ ஒப்ப‌ந்த‌ம் செய்கிற‌து என்றால் இந்நாட்டில் இன‌வாத‌த்தை ஒழித்து ந‌ல்ல‌தோர் ஆட்சியை அமைக்கும் ஆற்ற‌லும், நேர்மையும், துணிச்ச‌லும் ம‌ஹிந்த‌ ராஜ‌ப‌க்ச‌ த‌லைமையிலான‌ பொதுஜ‌ன‌ முன்ன‌ணிக்கு உண்டு என்ப‌தே உண்மை என்ப‌தை உல‌மா க‌ட்சி தெரிவித்துக்கொள்கிற‌து.

Comments

Popular posts from this blog

அதாவுல்லாவை புக‌ழும் ஹ‌ரீஸ்

ஒவ்வொரு நிமிடமும் நம்மை நோக்கி எறிகணைகள் வந்த வண்ணமே இருக்கிறது. நாங்கள் ஒற்றுமைப்பட்டு இனி செயலாற்ற முன்வர வேண்டும். அம்பாறை மாவட்டத்தில் உள்ள சகல அரசியல் கட்சி முக்கியஸ்தர்களும் ஒன்றிணைந்து எதிர்வரும் பொதுத்தேர்தலை சந்தித்து நாங்கள் ஒற்றுமையாக வாக்களித்தால் அம்பாறை மாவட்டத்தில் இருந்து ஐந்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாவார்கள் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி  எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.  தொடர்ந்தும் அங்கு பேசும் போது, கல்முனை பிரதேச விவகாரம் பற்றிய பிரதமருடனான கலந்துரையாடலுக்கு குறித்த தொகுதியின் மக்கள் பிரதிநிதியாகிய எனக்கு எவ்வித அழைப்புக்களும் விடுக்கப்பட்டிருக்க வில்லை. நான் நேரடியாக பிரதமர் மஹிந்தவை சந்தித்து மக்களின் பிரச்சினையை பற்றி தெளிவாக விளக்கியவுடன் அன்று மாலை என்னையும் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறும் அதற்கான ஏற்பாடுகளை தான் செய்வதாகவும் வாக்குறுதியளித்தார். அதன் பிரகாரமே நான் அக்கூட்டத்திற்க்கு சென்று வரவேற்பறையில் காத்திருந்தேன். அங்கு கலந்து கொண்டிருந்த முக்கிய பிரமுகர்கள் பலரும் அதிருப்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினால் சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியான கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானம்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினால் சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியான கரப்பாந்தாட்ட  விளையாட்டு மைதானம்  மதவாக்குள பிரதேசத்திற்கு  அமைத்து கொடுக்கப்ப்பட்டுள்ளது. கௌரவ முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான அல்ஹாஜ் றிஷாத் பதுயுதீன் அவர்களின் நிதியின் மூலம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் புத்தள மாவட்ட அமைப்பாளர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் முயற்சியினால் அகில இலங்கை மக்கள்  காங்கிரசின் மதவாக்குள கட்சிக் குழுவின் வேண்டுகோளுக்கு இணங்க மதவாக்குள பிரதேசத்திற்கு மிக நீண்டகால தேவைப்பாடாக இருந்த கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானம் நேற்று கெளரவ அலி சப்ரி ரஹீம் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது. அந்தவகையில் இந்த கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானமானது சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியாகும் எனவே இதனை  ஊருக்கு  அமைத்து கொடுத்தமைக்கு மதவாக்குள ஊர் மக்கள் மற்றும்இ விளையாட்டு குழு உறுப்பினர்கள் தங்கள் நன்றிகளை அகில இலங்கை மக்கள் காங்ரஸிற்கு  தெரிவித்து கொள்கின்றனர். ஊடகவியலாளர் சில்மியா யூசுப். 0769622313

சாய்ந்தமருது நகரசபை – விசேட வர்த்தமானி இன்று நள்ளிரவு !

சாய்ந்தமருது நகரசபை 2022 பங்குனி 20 அமுலாகும் வகையில் 2162/50 இலக்கம் கொண்ட அதிவிசேட வர்த்தமானி இன்று நள்ளிரவு வெளியாகவுள்ளது. பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் மற்றும் உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோனின் கையொப்பத்துடன் வெளியாகவுள்ளது . 1987ம் ஆண்டு கல்முனை தொகுதியில் 4 சபைகள் இயங்கின. அதனை முன்னாள் ஜனாதிபதி ஆர் .பிரேமதாசா ஒன்றிணைத்தார்.அதனை மீண்டும் பிரித்து தங்கள் பகுதியை ஒரு நகர சபையாக பிரித்து தருமாறு சாய்ந்தமருது மக்கள் கடந்த காலங்களில் பல்வேறு போராட்டங்கள் செய்தனர். அத்துடன் கடந்த 2018 ம் ஆண்டு இடம்பெற்ற உள்ளூராட்சி தேர்தலில் சுயேட்சை குழுவை சாய்ந்தமருது பள்ளிவாசல் களமிறக்கி அதில் 6 வட்டாரங்களையும் வென்று மொத்தம் 9 உறுப்பினர்களை பெற்றமை விசேட அம்சமாகும். கடந்த நல்லாட்சி அரசில் முஸ்லிம் அமைச்சர்கள் ,பிரதமர் நகர சபை தருவதாக வாக்குறுதி அளித்து ஏமாற்றியமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. அத்துடன் சாய்ந்தமருது பள்ளிவாசல் மற்றும் 6 மக்கள் பிரதி நிதிகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் வெற்றிக்காக ஒப்பந்தம் செய்து தேர்தல் பணிகளில் ஈடுபட்டனர் .கடந்த தேர்தலில் ச