எல்லோருக்கும் பொதுவிதியான மரணம், நூறுல்ஹக்கை பிரித்துவிட்டது" - மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் அனுதாபம்! ஊடகப்பிரிவு- பன்னூலாசிரியர் நூறுல்ஹக் அவர்கள் இறையடி சேர்ந்த செய்தியால், கடும் கவலையடைந்துள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். அன்னாரின் மறைவு குறித்து அவர் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "எழுத்துப் பணியில் ஓயாது உழைத்துக் கொண்டிருந்த ஒரு நண்பனை நான் இழந்துவிட்டேன். அவரது இடைவௌியால், முஸ்லிம் சமூகத்தின் தனிப்பெரும் திறமையில் வெற்றிடம் ஏற்பட்டுவிட்டது. அரசியல், சமூகவியல், இலக்கிய வௌிகளில் மர்ஹூம் நூறுல்ஹக்கின் ஆளுமைகள் பளிச்சிடுவதை அன்னாரின் படைப்புக்களில் பார்க்க முடியும். முஸ்லிம் பூர்வீகம் பற்றி மிகத் தௌிந்த சிந்தனைகளில் அவர் பணியாற்றியவர். சமூக, அரசியல் தலைமைகளை வழிகாட்டும் அளவுக்கு அவரது சிந்தனைகள் இருந்ததை என்னால் பெருமையுடன் ஏற்றுக்கொள்ள முடியும். கொழும்புக்கு வரும் நேரமெல்லாம் நேரடியாகவோ அல்லது தொலைபேசியிலோ என்னைத் தொடர்புகொள்ளும் அவர், முஸ்லிம் சமூகத்தின் சமகால, நிகழ்கா
இம்முறை ஜனாதிபதி தேர்தலில் மருதமுனையில் இருந்து அளிக்கப்படவுள்ள 13000 வாக்குகளும், புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் “அன்னம்” சின்னத்துக்கே அளிக்க வைப்பதற்கான அத்தனை முயற்சிகளும் இடம்பெற்று வருகிறது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிகள் இணைந்து 16ம் திகதி ஒட்டு மொத்த வாக்காளர்களையும் வாக்களிக்க செய்யும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றமை சிறப்பம்சமாகும்.
இன்று 14/11/2019 நடைபெற்ற அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மத்தியகுழு, தேர்தல் பணிக்குழு கூட்டத்தின் போது சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து பணியாற்றுவதென ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த செயற்பாடானது சஜித் பிரேமதாஸவின் வெற்றியில் மருதமுனையின் பரிபூரண பங்களிப்பையும் ஒற்றுமையையும் பறைசாற்றி நிற்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
ஷிபான் BM.
Comments
Post a comment