ஒரு வாக்காளருக்காக செலவிட்ட மொத்த செலவு 969 ரூபாவாகும்

நாளை நடை­பெ­ற­வுள்ள ஜனா­தி­பதித் தேர்­த­லுக்­கான மொத்த செலவு 5500 மில்­லியன் ரூபா எனவும் 
அத­ன­டிப்­ப­டையில் ஒரு வாக்­கா­ள­ருக்­காக இம்­முறை தேர்­தல்கள் ஆணைக்குழுவால் 344 ரூபா செல­வி­ட­ப்படு­வ­தாக  மதிப்­பீடு செய்­யப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. 

இம்­முறை ஜனா­தி­பதித் தேர்­தலில் 35 வேட்­பா­ளர்கள் போட்­டி­யிடும் நிலையில், அவர்கள் அனை­வரும்  தேர்தல் பிர­சா­ரத்­துக்கு செல­விட்­ட­தாக மதிப்­பி­டப்­படும்  மொத்த தொகை 10 ஆயிரம் மில்­லியன் ரூபா­வாகும். அதன்­படி ஒரு வாக­்காளர் தொடர்பில் வேட்­பா­ளர்கள் செல­விட்ட தொகை 625 ரூபா என மதிப்­பீடு செய்­யப்பட்­டுள்­ளது. 

தேர்­தல்கள் ஆணைக்குழுவின் உத்­தி­யோ­க­பூர்வ தக­வல்­களின் பிர­காரம்,  கடந்த 2005 ஆம் ஆண்டு ஜனா­தி­பதித் தேர்­தலின் மொத்த செலவு 715 மில்­லியன் ரூபா­வாகும். அப்­போது ஒரு வாக்­கா­ள­ருக்கு செல­வி­டப்­பட்ட தொகை 54 ரூபா­வாகும்.   2010ஆம் ஆண்டு ஜனா­தி­பதித் தேர்­த­லுக்­காக 1856 மில்­லியன் ரூபாவை தேர்­தல்கள் திணைக்­களம் செல­விட்­டுள்­ளது. 

இதன்­போது வாக்­காளர் ஒரு­வ­ருக்கு 132 ரூபா செல­வா­கி­யுள்­ளது. அத­ன­டிப்­ப­டையில்  2015 ஆம் ஆண்டில் 2706 மில்­லியன்  ரூபாவை தேர்­தல்கள்  திணைக்­களம் ஜனா­தி­பதித் தேர்­த­லுக்­காக  செல­விட்­டுள்ள நிலையில்,  அப்­போது ஒரு வாக்­கா­ள­ருக்­காக 180 ரூபா  செல­வி­டப்­பட்­டுள்­ளது.  இந்­நி­லை­யி­லேயே இம்­முறை  ஜனா­தி­பதித் தேர்தல் செல­வீனம் 5500 மில்­லியன் ரூபா என மதிப்­பி­டப்பட்­டுள்­ள­துடன்,  வாக்­காளர் ஒரு­வ­ருக்­கான செலவு 344 ரூபா என மதிப்­பி­டப்பட்­டுள்­ளது.

அதன்­படி இம்­முறை ஜனாதிபதித் தேர்தலுக்காக  வேட்பாளர்களும் தேர்தல்கள் ஆணைக் குழுவும் ஒரு வாக்காளருக்காக செலவிட்ட மொத்த செலவு  969  ரூபாவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-பஸீர்

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்