நாடு முழுவதும் 73,000 பேருக்கு டெங்கு தாக்கம் – கொழும்பில் டெங்கு அபாயம் அதிகரிப்பு

மேல்மாகாணத்தின் கொழும்பு மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக டெங்கு நோய் கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
இதுவரையான காலப்பகுதியில் கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் 15632 பேர் வரையில் டெங்கு நோய் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில் டெங்கு நோய்த்தாக்கம் மேலும் அதிகரித்துச் செல்வதனை தடுப்பதற்காக சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்திருக்குமாறு பொதுமக்களிடம் டெங்கு நோய் கட்டுப்பாட்டு பிரிவு கோரிக்கை விடுத்துள்ளது.
கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட பகுதியில் மாத்திரம் இவ்வருடத்தில் இது வரையான காலப்பகுதியில் 2934 பேரும், கொழும்பின் ஏனைய பகுதிகளில் 12698 பேரும் டெங்கு நோய் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
அத்துடன், கொழும்பு மாநகரசபைக்கு உட்பட்ட பகுதியில் இம்மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 391 பேரும், கொழும்பின் ஏனைய பகுதிகளில் 2023 பேரும் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அந்த வகையில் கடந்த மாதத்திலேயே அதிகளவிலானோர் டெங்கு நோய் தாக்கத்திற்கு உள்ளாகியிருந்ததுடன், 11213 பேரே இவ்வாறு நோய் தாக்கத்திற்கு உள்ளாகியிருந்தனர். ஆயினும் இம்மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் சுமார் 10273 பேர் வரையில் டெங்கு நோய் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் பிரகாரம் இது வரையில் சுமார் 73 ஆயிரத்திற்கும் அதிகமானோர் டெங்கு நோய் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளனர். அத்துடன், கடந்த ஏப்ரல் மாதத்தில் மாத்திரம் சுமார் 2970 பேர் டெங்கு நோய் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளதுடன், அம்மாதமே இது வரையான காலப்பகுதியில் குறைந்தளவிலானோர் டெங்கு நோய் தாக்கத்திற்கு உள்ளான மாதமாக பதிவாகியுள்ளது.
மேலும், கொழும்பு, கம்பஹா, கண்டி, களுத்துறை ஆகிய பகுதிகளிலேயே டெங்கு நோய்த்தாக்கம் இம்மாதத்தில் அதிகரித்த மட்டத்தில் காணப்படுகின்றது.
அந்த வகையில் முறையே, கொழும்பு மாவட்டத்தில் 2414 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 1017 பேரும் , கண்டி மாவட்டத்தில்  1468 பேரும் , களுத்தறை மாவட்டத்தில் மாத்திரம் 695 பேர் வரையிலும் இம்மாதத்தின் இது வரையான காலப்பகுதியில் டெங்கு நோய் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
கடந்த வருடத்தில் நவம்பர் மாதத்தில் 4537பேர் வரையில் டெங்கு நோய் தாக்கத்திற்கு உள்ளாகியிருந்த நிலையில் இவ்வருடத்தில் நவம்பவர் மாதத்தில் டெங்கு காய்ச்சல் பரவும் வேகம் அதிகரித்துள்ளமையை காணக்கூடியதாகவுள்ளது.
மழையுடன் கூடிய காலநிலையின் காரணமாக டெங்கு நுளம்பு பரவும் வேகம் அதிகரித்து வருவதானால் நீர்தேங்கி நிக்கும் இடங்கள் தொடர்பில் கவனம் செலுத்தி துப்புரவு சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்தியருப்பது பொதுமக்களின் பொறுப்பாகும்.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்