600 கிலோ கிராம் பீடி இலைகளுடன் இருவர் கைது

புத்தளம், உடப்பு பகுதியில் கடற்படையினரால் இன்று (05) முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது, சுமார் 600 கிலோ கிராம் பீடி இலைகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வடமேல் கடற்படை கட்டளைப் பிரிவினர் புத்தளம், உடப்பு கடற்கரைப் பகுதியில் மேற்கொண்ட வழமையான ரோந்து நடவடிக்கையின்போது, சந்தேகத்திற்கிடமான டிங்கிப் படகொன்றை கண்காணித்து, அப்படகை சோதனைக்கு உட்படுத்தியபோது அதில் பீடி இலை இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பீடி இலை மற்றும் டிங்கிப் படகுடன் குறித்த சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக, கடற்படையினர் தெரிவித்தனர்.

புல்மோட்டை மற்றும் கந்தக்குலிய பகுதிகளைச் சேர்ந்த 26 மற்றும் 31 வயதுடைய சந்தேகநபர்கள் இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைப்பற்றப்பட்டுள்ள பீடி இலை மற்றும் டிங்கிப் படகுடன் சந்தேக நபர்கள் மேலதிக நடவடிக்கைகளுக்காக சின்னப்பாடு சுங்க அலுவலக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், கடற்படையினர் தெரிவித்தனர்.

Comments

popular posts

මුස්ලිම් ස්වාධීන කණ්ඩායම්වල අරමුණ වන්නේ මුස්ලිම් ප්‍රජාවගේ ඡන්දය බිඳ දැමීමයි,

அரசாங்கம் இனவாதத்துடன் செயற்படுவதாகக்கூறும் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை

ஹக்கீமை சமூக துரோகி என குற்றம் சாட்டி அரசியல் செய்யும் முஸர்ரப்