20 நாட்கள் பாராளுமன்றம் சென்று வந்தால் போதுமானது. அவர்களுக்கே ஓய்வூதியமும் வழங்கப்படும்- அனுர குமார

உலகில் செயற்படாமல் சம்பளம் எடுக்கும் ஒரே பதவி பாராளுமன்ற உறுப்பினர் பதவிதான் என தேசிய மக்கள் சக்தி அமைப்பின் ஜனாதிபதி வேட்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். 

மூன்று மாதத்துக்கு ஒரு முறை பாராளுமன்றத்துக்குச் சென்றால், வருடத்துக்கு நான்கு நாட்கள் என ஐந்து வருடத்துக்கும் 20 நாட்கள் பாராளுமன்றம் சென்று வந்தால் போதுமானது என்றும் அத்தகையோருக்கு ஓய்வூதியமும் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

இதற்கிணங்கவே நாம் அரசாங்கம் அமைத்தவுடன் பாராளுமன்ற உறுப்பினர்களுக்குள்ள ஓய்வூதியத்தை இல்லாமல் செய்ய தீர்மானித்துள்ளோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

மாத்தறைப் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்