வடக்கு, கிழக்கில் புனர்வாழ்வு பெற்ற மேலும் 20 பேருக்கு அரச நியமனம் வழங்க அமைச்சரவை அங்கீகாரம்

வடக்கு, கிழக்கில் புனர்வாழ்வளிக்கப்பட்டு மீண்டும் சமூகமயப்படுத்தப்பட்டவர்களுள் பட்டப் படிப்பை பூர்த்தி செய்த மேலும் 20 இளைஞர், யுவதிகளுக்கு புனர்வாழ்வு ஆணையாளர் செயலகத்தின் கீழ் நியமனங்கள் வழங்கப்படுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூக மயப்படுத்தப்பட்ட இளைஞர், யுவதிகளுள் பட்டப் படிப்பை பூர்த்தி செய்த 65 பேருக்கு பட்டதாரி பரிந்துரை முறையின் கீழ் ஏற்கனவே நியமனங்கள் வழங்கப்பட்டன.

புனர்வாழ்வு ஆணையாளர் நாயக செயலகத்தின் புனர்வாழ்வு வேலைத்திட்டத்தின் கீழ் புனர்வாழ்வளிக்கப்பட்டு மீண்டும் சமூகமயப்படுத்தப்பட்டு பட்டப் படிப்பை பூர்த்தி செய்த மேலும் 20 இளைஞர் யுவதிகளுக்கே இந்த பரிந்துரை முறையின் கீழ் நியமனங்களை வழங்குவதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Comments

popular posts

அதாவுல்லாவை புக‌ழும் ஹ‌ரீஸ்

சாய்ந்தமருது நகரசபை – விசேட வர்த்தமானி இன்று நள்ளிரவு !

தேசிய காங்கிரசிடம் உதவி கேட்கும் முஸ்லிம் பெருங்கட்சிகள்.