மீன்பிடி துறைமுகங்கள் அபிவிருத்திக்கு பிரான்ஸ் 140 மில்லியன் யூரோக்களை இலங்கைக்கு வழங்க முன்வந்துள்ளது

நான்கு பாரிய மீன்பிடித் துறைமுகங்களை அபிவிருத்தி செய்வதற்காக பிரான்ஸ் அரசாங்கம் 100 தொடக்கம் 140 மில்லியன் பிரான்ஸ் யூரோக்களை இலங்கைக்கு வழங்க முன்வந்துள்ளது.

இது தொடர்பான பேச்சுவார்த்தை மீன்பிடி மற்றும் நீரியல்வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் பிரான்ஸ் வங்கிப் பிரதிநிதிகளுக்குமிடையில் அமைச்சில் நடைபெற்றது.

பேருவளை, காலி, புராணவெல்ல மற்றும் குடாவெல்ல ஆகிய மீன்பிடி துறைமுகங்களே இந்நிதியுதவியின் கீழ் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.

இது தொடர்பான சாத்தியக்கூற்று அறிக்கை முடிவடைந்துள்ளன. இவை தொடர்பில் ஆராயும் இறுதி பயிற்சிக் கருந்தரங்கு டிசம்பர் 01ஆம் 02ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. 

இலங்கை அரசாங்கம் முன்வைத்த வேண்டுகோளுக்கிணங்கவே பிரான்ஸ் அரசாங்கம் இந்நிதியுதவியை வழங்க முன்வந்துள்ளது. இதன்கீழ் தென் மாகாணத்திலுள்ள மீனவ சமூகம் அதிகம் நன்மை பெற முடியுமென்றும் நம்பப்படுகின்றது.

-லக்ஷ்மி பரசுராமன்

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்