எல்லோருக்கும் பொதுவிதியான மரணம், நூறுல்ஹக்கை பிரித்துவிட்டது" - மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் அனுதாபம்! ஊடகப்பிரிவு- பன்னூலாசிரியர் நூறுல்ஹக் அவர்கள் இறையடி சேர்ந்த செய்தியால், கடும் கவலையடைந்துள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். அன்னாரின் மறைவு குறித்து அவர் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "எழுத்துப் பணியில் ஓயாது உழைத்துக் கொண்டிருந்த ஒரு நண்பனை நான் இழந்துவிட்டேன். அவரது இடைவௌியால், முஸ்லிம் சமூகத்தின் தனிப்பெரும் திறமையில் வெற்றிடம் ஏற்பட்டுவிட்டது. அரசியல், சமூகவியல், இலக்கிய வௌிகளில் மர்ஹூம் நூறுல்ஹக்கின் ஆளுமைகள் பளிச்சிடுவதை அன்னாரின் படைப்புக்களில் பார்க்க முடியும். முஸ்லிம் பூர்வீகம் பற்றி மிகத் தௌிந்த சிந்தனைகளில் அவர் பணியாற்றியவர். சமூக, அரசியல் தலைமைகளை வழிகாட்டும் அளவுக்கு அவரது சிந்தனைகள் இருந்ததை என்னால் பெருமையுடன் ஏற்றுக்கொள்ள முடியும். கொழும்புக்கு வரும் நேரமெல்லாம் நேரடியாகவோ அல்லது தொலைபேசியிலோ என்னைத் தொடர்புகொள்ளும் அவர், முஸ்லிம் சமூகத்தின் சமகால, நிகழ்கா
பிரபாகரன் தமிழ் மக்களை ஒன்று திரட்டியதை போல் முஸ்லிம்களும் ஒன்றுபட வேண்டிய நேரம் நெருங்கிவிட்டது – ஹரிஸ் எம்.பி சூளுரை
கடந்த ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசாவை ஆதரித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வும் சமகால அரசியல் சம்மந்தமான கலந்துரையாடலும் இன்று சனிக்கிழமை (30) சாய்ந்தமருது, மாளிகைக்காடு பிரதேசதில் அமைந்துள்ள தனியார் மண்டபம் ஒன்றில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான எச்.எம்.எம். ஹரீஸ் தலைமையில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் அம்பாறை மாவட்ட அமைப்பாளர்கள், உயர்பீட உறுப்பினர்கள், கல்முனை மாநகர சபையின் மேயர் எ.எம். றகீப், உப மேயர் காத்தமுத்து கணேஸ் மற்றும் மாநகர சபை உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வின் போது உரையற்றிய பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் கூறும் போது நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் சர்வதேச சக்திகளின் தலையீடு இருந்தது என்ற விடயம் எல்லோருக்கும் தெரிந்தது, அதிலும் இந்தியாவின் தலையீடு அதிகமாக இருந்ததை இந்த இடத்தில் கூறியாக வேண்டும், குறிப்பாக இந்தியாவில் நடந்து முடிந்த தேர்தலில் நரேந்திர மோடியின் வெற்றிக்கான காரணம் இலங்கையில் ஸஹ்ரான் என்ற பைத்தியம் மேற்கொண்ட ஈஸ்டர் தாக்குதலையும், முஸ