ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரியின் கருத்திற்கு UNP யினர் கண்டனம்

கோத்தபாய ராஜபக்ஷவிற்கு வாக்களிக்காவிடின் முஸ்லிம் சமூகம் வன்முறைகளுக்கு இலக்காக நேரிடும் என்று ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி வெளியிட்டதாக ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் பலரும் கண்டனம் வெளியிட்டுள்ளனர்.

அண்மையில் சமூகவலைத்தளங்களில் முஸ்லிம்கள் மத்தியில் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி உரையாற்றும் காணொளி ஒன்று பரப்பப்பட்டு வரும் நிலையில்,

டுவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களில் இக்காணொளியில் அலி சப்ரி கூறும் கருத்துக்கள் கடும் கண்டத்திற்கு உள்ளாகியிருக்கின்றது. 

சமூக செயற்பாட்டாளர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் முஸ்லிம் சமூகத்தினரை தவறாக வழிநடத்த வேண்டாம் என்றும், தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை அவர்கள் சுயமாக மேற்கொள்வதற்கு இடமளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். 

இந்நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள் பலரும் தமது டுவிட்டர் பக்கத்தில் சட்டத்தரணி அலி சப்ரியின் கருத்துக்கு தமது பதில் கருத்துக்களையும், கண்டனங்களையும் வெளியிட்டிருக்கின்றார்கள். 

இது தொடர்பில் ஜனாதிபதி  சட்டத்தரணி அலி சப்ரி விளக்கம் அளிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்