ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டார்...!!!! ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். சிரிகொத்தவில் உள்ள கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தன் உறுப்பினர்களுக்கு புதிய பதவி நிலைகளை நியமித்தது. கட்சியின் பொதுச் செயலாளராக பணியாற்றிய அகில விராஜ் கரியவாசம் ஐ.தே.க உதவித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னர் உதவித் தலைவராக ரவி கருணநாயக்க காணப்பட்டார். அகில விராஜ் கரியவாசம் பதவியை ஏற்றுக்கொண்டு, ஐ.தே.க புதிய பொதுச் செயலாளராக பாலித ரங்க பண்டாராவை நியமித்தார். ஐ.தே.க வின் உறுப்பினர் வஜிர அபேவர்தனே தவிசாளராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார், ஏ.எஸ்.எம் மிஸ்பா பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய நியமனங்கள் இருந்தபோதிலும், முன்னாள் பிரதமர் ரனில் விக்கிரமசிங்கவே ஐ.தே.க தலைவராக நீடிப்பார். துணைத் தலைவர் ருவன் விஜேவர்தனவும் தனது பதவியில் தொடருவார்.
அமெரிக்காவின் Millennium Challenge Corporation நிறுவனம் இலங்கைக்கு வழங்கும் 480 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியைப் பெற்றுக்கொள்ள அமைச்சரவை இன்று அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இது தொடர்பிலான அமைச்சரவை பத்திரத்தை அமைச்சர் மங்கள சமரவீர அமைச்சரவையில் சமர்ப்பித்திருந்தார்.
கொழும்பில் வாகன போக்குவரத்து முகாமைத்துவம், நாடளாவிய ரீதியில் வீதி நிர்மாணம் மற்றும் அபிவிருத்தி, முழு நாட்டையும் உள்ளடக்கும் வகையிலான காணி நிர்வாக நடவடிக்கைகளை மேம்படுத்துவது ஆகிய திட்டங்கள் இந்த நிதியின் மூலம் செயற்படுத்தப்படவுள்ளன.
Millennium Challenge Corporation நிறுவனத்துடன் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட பின்னரும் இலங்கையின் தேவைக்கேற்ப குறித்த திட்டங்களில் திருத்தம் மேற்கொள்வதற்கான இயலுமை இலங்கை அரசாங்கத்திற்கு உள்ளதாக நிதி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவிடமிருந்து இவ்வாறு நிதியைப் பெற்றுக்கொள்ளும் 37 ஆவது நாடு இலங்கை என்பதுடன், 2020 ஆம் ஆண்டு இந்த உடன்படிக்கை அமுலுக்கு வரவுள்ளது.
Comments
Post a comment