முஸ்லிம்கள் எங்களுடன் உள்ளனர், முஸ்லிம்கள் மீது IS பெயர் பலகையை UNP அரசு தொங்கவிட்டது - விமல் வீரவன்ச


தற்போதைய அரசாங்கம் முஸ்லிம் மக்களின் நண்பன் அல்ல எதிரி என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

மாத்தறை வெலிகமை பிரதேசத்தில் இன்று -20- நடந்த பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இனத்தின் தலையெழுத்து தீர்மானிக்கப்படும் நாள் நவம்பர் 16. 17 ஆம் திகதி சூரியன் உதிக்கும் போது அறுதி பெரும்பான்மையுடன் நாட்டின் 7வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக்ச பதவியேற்பார்.

அடிப்படைவாதிகளுக்கு வேலி போடும் தலைவவரை கோரும் நேரத்தில், சகல இனத்தவரின் பாதுகாப்பும் கோத்தபாய ராஜபக்சவிடம் மட்டுமே இருக்கின்றது.

நாடு சஹ்ரான்களின் குண்டுகளால் பரவியுள்ளது. இப்படியான நிலைமையில் நாடு கேட்கும் ஒரே தலைவர் கோத்தபாய ராஜபக்ச. கிழக்கில் தமிழ் மக்களும், சமாதானத்தை விரும்பும் முஸ்லிம் மக்களும் என்றும் இல்லாத அளவுக்கு எங்களுடன் இருக்கின்றனர்.

முஸ்லிம் மக்கள் மீது ஐ.எஸ். பெயர் பலகையை இந்த அரசாங்கம் தொங்கவிட்டது. அந்த பெயர் பலகையை கோத்தபாய ராஜபக்சவினால் மட்டுமே கழற்ற முடியும்.

சகல இனங்களும் ஒரு இலங்கை தாயின் கீழ் ஒன்றுக் கூடும் நாள் நவம்பர் 16 ஆம் திகதி மட்டுமே எனவும் விமல் வீரவங்ச குறிப்பிட்டுள்ளார்

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்