சர்பராஸ் அகமட் பாகிஸ்தான் அணியின் அனைத்து வகையான போட்டிகளின் தலைவர் பதவியில் இருந்தும் நீக்கப் பட்டார்


பாகிஸ்தான் அணியின் தலைவர் சர்பராஸ் அகமட் அந்த அணியின்
 அனைத்து Format  கிரிக்கெட் அணிகளின்  தலைமைத்துவத்தில் இருந்து பாகிஸ்தான் கிரிக்கெட் சபையால் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

32 வயதுடைய சர்பராஸ் அகமட் உலகக் கோப்பைகள் உட்பட  நீண்ட காலமாக பாகிஸ்தான் அணியில் விளையாடியும் தலைமைத்துவம் தாங்கியும் வந்தார் .

உலகக்கிண்ணம் உட்பட அண்மையில் இலங்கையில் இடம்பெற்ற T20 போட்டிகளிலும் இவர் தலைமையிலான பாகிஸ்தான் அணி தோல்விகளை தழுவியது.

T20 அணிகளில் உலகின் நம்பர்-1 இடத்தை பெற்றுள்ள பாகிஸ்தான் அணி இலங்கை அணியை இலகுவாக வீழ்த்திவிடும் என்றே பலராலும் எதிர்பார்க்கப்பட்டது இந்நிலையில் இலங்கை அணியுடன் T20 போட்டியில் வெள்ளையடிப்பு செய்யப்பட்டது.


இந்நிலையில் இவர் T20 உட்பட அனைத்து தர கிரிக்கெட் அணியிலிருந்தும் பதவி நீக்கம் செய்யப் பட்டுள்ளார்.

Comments

popular posts

சீதனம். ஹறாமானதா? முபாறக் மௌலவியின் விளக்கம்.

ஹக்கீமை சமூக துரோகி என குற்றம் சாட்டி அரசியல் செய்யும் முஸர்ரப்