Skip to main content

எம் பி ப‌த‌விக்காக‌ அதுர‌லிய‌ தேர‌ரும் ஞான‌சார‌வும் மோத‌ல்.

 பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரருக்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவியை விட்டுக் கொடுக்க முடியாது பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் தெளிவாக குறிப்பிட்டுள்ளார் . இவ்விடயத்தில் கட்சி மட்டத்தில் எவ்வித தீர்மானத்தையும் எடுக்க முடியாது . ஞானசார தேரரும் , அத்துரலிய ரத்ன தேரரும் ஒரு தேசியப்பட்டியல் ஆசனத்திற்காக செய்துகொண்ட ஒப்பந்தங்கள் ஏதும் கட்சிக்கு தெரியாது என அபே ஜனபல வேகய கட்சியின் தலைவர் சமன் பெரேரா தெரிவித்தார் .  அபேஜன வேகய கட்சிக்கு கிடைக்கப்பெற்ற ஒரு தேசியப்பட்டியல் ஆசனம் குறித்து எழுங்துள்ள முரண்பாடு குறித்து ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார் . அவர் மேலும் குறிப்பிடுகையில் , கடந்த வருடம் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் அபேஜனபல வேகய கட்சிக்கு கிடைக்கப்பெற்ற மொத்த வாக்குகளுக்கு ஒரு தேசியப்பட்டியல் ஆசனம் ஒதுக்கப்பட்டது . அமைய இந்த ஆசனத்திற்கு அபேஜன பல வேகய கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் விமல் திஸ்ஸ தேரர் , அபே ஜன பல கட்சியின் வேட்பாளர்களான தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் , பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார த

மார்க்க ஒழுக்க விழுமியங்களுடன் இறுதி மூச்சு வரை வாழ்ந்த மர்ஹூம் எம்.எம்.எம். மர்சூக்


மார்க்க ஒழுக்க விழுமியங்களுடன் இறுதி மூச்சு வரை வாழ்ந்த
மர்ஹூம் எம்.எம்.எம். மர்சூக்

   இவ்வுலகில் வாய்மை நேர்மையுடன் வாழ்ந்த  எம்.எம்.எம்.மர்சூக் ஹாஜியாரின் இறப்புச் செய்தி, பலநூறு பேருக்கு தாங்க முடியாத பேரதிர்ச்சியாக இருந்தது.
   தன் அன்பான மனைவியையும், பாசமிக்க ஐந்து மக்களையும் விட்டுப்பிரிந்த அன்னார், எவ்வித தீய பழக்க வழக்கங்களையும் கொண்டிராது, மார்க்க ஒழுக்க விழுமியங்களுடன் இறுதி மூச்சு வரை வாழ நேர்ந்தது, எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாருக்கு அளித்த பெறும் பேறு எனலாம்.    பாசத்தையும், நேசத்தையும் பிறவிக் குணமாகக் கொண்ட அன்னாரோடு, வஞ்சகமும் வெஞ்சினமும் ஒன்று சேர முடியாமல் தன் கூட்டுறவை முறித்து, ஆயுள் பகை கொண்டது எனக்கூறலாம். 78 ஆண்டுகள் வாழ்ந்து மறைந்த அன்னாரின் பிரிவு, எங்களுக்கு எந்நாளும் நீங்காத நினைவாக இருக்கின்றது.
   அறுபது ஆண்டுகளுக்கு முன் "ஹமீதியா ஜெம் பெலஸ்" என்ற பெயரில் நகை வியாபாரத்தில், தன் அயராத முயற்சியுடன், தன்னை ஈடுபடுத்திக் கொண்ட அன்னாருக்கு வாய்மை, நேர்மை, நாணயம், நம்பிக்கை போன்ற உயர்ந்த குணங்கள் தொழில் ரீதியில் உயர்வடைவதற்கு உரமிட்டன எனக் குறிப்பிடலாம்.
    "தேசபந்து", " "வியாபார விபூஷண" மற்றும் அகில இலங்கை சமாதான நீதவான் போன்ற சிறப்புமிக்க கெளரவ நாமங்கள், அன்னாருடைய ஆளுமைக்குக் கிடைத்த சிறந்த பரிசுகள்.
   கொழும்பு - 09, தெமட்டகொடை,  ஆராமய வீதியில், தன் சொந்த இருப்பிடத்தில் தனது  காணியில் ஒரு பகுதியை வழங்கி, "மீராணிய்யா மஸ்ஜித்" மற்றும் மத்ரஸாவை உருவாக்கத் துணை புரிந்து, பன்னிரெண்டு ஆண்டுகளாக அவற்றின் உறுப்பினராக சேவை செய்தார். அதன்பின், சிறு கால இடை வேளைக்குப் பிறகு கொழும்பு - 11, டாம் வீதியில் அமைந்துள்ள "மஸ்ஜிதுல் ஹிதாயா" பள்ளிவாசல் தலைவராக பதினைந்து ஆண்டுகளாக, சக உறுப்பினர்களோடு, தோளோடு தோள் நின்று பல்வேறு பணிகளில் ஈடுபட்டார்.
   2019 ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி புதன்கிழமையன்று இதே பள்ளிவாசலில் ழுஹர் தொழுகையையும் தனது இறுதி இறை வணக்கமாக  நிறைவேற்றிக் கொள்ளும்  பெரும் பாக்கியத்தைப் பெற்று, மதிய உணவுக்காக வீடு திரும்பிய சில நிமிடங்களில் மிக அமைதியாக இறைவனடி சேர்ந்தார். ( இன்னா லில்லாஹி - வ இன்னா இலைஹி ராஜிஊன் )
   தன் பொருட் செல்வத்தை தன் வீட்டோடு மாத்திரம்  மட்டுப்படுத்திக் கொள்ளாது, உற்றார் உறவினர்களுடன் நடை தளர்ந்தவர்களுடன், நல மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்ட விதம் அபாரம். இக்குடும்ப வட்டத்தில் வேறு எவராலும் நிரப்ப முடியாத ஒரு பெரும் இடை வெளியை, அன்னாரது பிரிவு ஏற்படுத்தி விட்டதென்றால் மிகையல்ல.
   அவரது இறுதிச் சடங்கில், கொடு வெயிலின் கொடூரத்தையும் பாராது, பிரார்த்தனைகளில் ஈடுபட்டிருந்த மக்களின் காட்சி, இயற்கை எய்தியவர் தன் ஜீவிய காலத்தில் எவ்வாறு வாழ்ந்தார் என்பதற்கு சிறந்த சாட்சியாக  இருந்தது.
   இவ்வுலகிற்கு வந்தவர்கள் எல்லோரும் தங்கிவிட்டால், இம்மண்ணில் இடமில்லை என்பது யதார்த்தம். இருப்பினும், பாச நேசத்தால் எம்மோடு கட்டுண்டவர் எம்மை விட்டும் பிரியும்போது ஏற்படும் துயரத்தை ஜீரணித்துக் கொள்வது அவ்வளவு எளிதல்ல.
   அன்னாரது மறுமை வாழ்வின்  ஈடேற்றத்துக்காக பிரார்த்திப்போம்.

-  ஐ. ஏ. காதிர் கான்
(மினுவாங்கொடை நிருபர் )

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

  பெட்ரோலுக்கு விலை கூடுகிற‌தா?  பொருட்க‌ளுக்கு விலை கூடுகிற‌தா? இது ப‌ற்றி முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌த்தேவையில்லை. ஏனென்றால் இந்த‌ நாட்டின் 2 கோடி ம‌க்க‌ளில் ஒன்ன‌ரைக்கோடி ம‌க்க‌ள் சிங்க‌ள‌ ம‌க்க‌ள். பெற்றோலுக்கு விலை கூடினால் , பொருள்க‌ளுக்கு விலை கூடினால்  அது தாக்க‌ம் முத‌லில் சிங்க‌ள‌ ம‌க்க‌ளுக்குத்தான்.  அத‌ற்கு அடுத்துதான் சிறுபான்மை ம‌க்க‌ளைத்தாக்கும். ஒன்ன‌ரைக்கோடி பெரிதா? 50 ல‌ட்ச‌ம் பெரிதா? இந்த‌ அர‌சாங்க‌ம் 100க்கு 99.5 சிங்க‌ள‌ ம‌க்க‌ளால் கொண்டு வ‌ர‌ப்ப‌ட்ட‌ அர‌சாங்க‌ம். பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரித்தால் அவ‌ர்க‌ள் பார்த்துக்கொள்வார்க‌ள். நாம் த‌லையை ஓட்டுவ‌தால் எந்த‌ ந‌ன்மையும் கிடைக்க‌ப்போவதில்லை. முடியுமாயின் பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்பு ப‌ற்றி முஸ்லிம்க‌ள் ஓட்டுப்போட்ட‌ முஸ்லிம் க‌ட்சிக‌ளின் உறுப்பின‌ர்க‌ளை பாராளும‌ன்ற‌த்தில், ஊட‌க‌ங்க‌ளில் பேச‌ சொல்லுங்க‌ள்.  அவ‌ர்க‌ளே பேசாம‌டந்தையாக‌ இருக்கும் போது முஸ்லிம்க‌ள் ஏன் அல‌ட்டிக்கொள்ள‌ வேண்டும்? பொருட்க‌ள் விலை கூடுத‌ல் பெரிய‌ விட‌ய‌மா? த‌ம‌க்கென்ற‌ நாட்டை பாதுகாப்ப‌து முக்கிய‌மா என்ப‌து பெரும்பாலான‌ சிங்க

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

 றிசாத் எம்.பி கைதுக்கு முன்னராக வெளியிட்ட ஒளிப்பதிவை பார்க்கும் போது அழுகையே வந்து விட்டது :  அ.இ.ம.கா அம்பாறை செயற்குழு நூருல் ஹுதா உமர்  அண்மையில் கைது செய்யப்பட்டு விசாரணை காவலில் வைக்கப்பட்டிருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனின் கைதை கண்டித்து தமது எதிர்ப்பை காட்டும் முகமாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அம்பாறை மாவட்ட செயற்குழு இன்று வெள்ளிக்கிழமை கல்முனையில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போது அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு  நூற்றுக்கணக்கானவர்களை கொலைசெய்த கொலையாளிகள், பாரிய மோசடியில் ஈடுபட்ட கொள்ளையர்களை கைது தேய்வது போன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரை கைது செய்ததன் மூலம் இந்த நாட்டின் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்துள்ளார்கள். இவர்களின் இந்த செயல்கள் இந்த நாட்டில் சிறுபான்மை மக்கள் வாழ்வதையே கேள்விக்குறியாக்குகிறது. முஸ்லிங்களை தீவிரவாதிகளாக காட்டி இந்த நாட்டின் ஆட்சியை கைப்பற்றிய இவர்கள் ஆட்சியை கொண்டு செல்ல முடியாமல் திணறிக்கொண்டு தக்கவைக்க  வேண்டிய சூழ்நி

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்

-முபாறக் அப்துல் மஜீத் மௌலவி – - பிறை பார்த்து நோன்பு பிடித்தல், பிறை கண்டு நோன்புப் பெருநாளை எடுத்தல், ஹஜ் பிறையின் ஆரம்பம், அரபா நாள் என்பன சமீப காலத்தில் ஏற்பட்டுள்ள நவீன பிரச்சினைகளாகும். வானொலி, தொலைபேசி, சட்டலைட் போன்றவை இல்லாத ஒரு காலத்தில் இது ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. மாறாக இது பரவலாக்கப்பட்டு உலகம் ஒரு குறுகிய, சிறிய கிராமமாக உருவெடுத்துள்ள நிலையிலேயே இப்பிரச்சினைகள் எழுந்துள்ளன. இன்றைய உலகம் என்பது ஒரு மனிதனின் உள்ளங்கைக்குள் அடங்குமளவு சுருங்கிவிட்ட நிலையில் முஸ்லிம் சமூகம் மத்தியில் இந்தக்கருத்துக்கள் பற்றிய விழிப்புணர்வும், அவை பற்றிய தெளிவையும் எதிர் பார்ப்பதில் அர்த்தமுண்டு. இது விடயம் ஒரு பிரச்சினையாக உருவெடுத்தமைக்கு பல நியாயமான காரணங்களும் உள்ளன. அத்தகைய நியாயங்களை நாம் குர்ஆன், ஹதீத் நிலைமையில் நின்று ஆராயும் போது பல தெளிவுகள் நமக்கு ஏற்படும். ஆகவே, பிறை விடயத்தை நாம் ஆராயும் போது குர்ஆன், ஹதீத் ஆதாரங்கள், சூழல், நவீன தொழில் நுட்பம் என்பனலற்றை கருத்திற் கொள்ள வேண்டியது அவசியமானதாகும். இந்த வகையிலேயே நாம் பிறைக்குரிய சர்சையை அணுக வேண்டும். அந்த வகைய