இலங்கை தொழிற்‌ பயிற்சி அதிகார சபையின்‌ ஹோட்டல்‌ பாடசாலை ஒன்றுக்கான புதிதாக நிருமாணிக்கப்பட்ட கட்டிடம்‌ திறந்து வைக்கப்பட்டது


இலங்கை தொழிற்‌ பயிற்சி அதிகார சபையின்‌ ஹோட்டல்‌
பாடசாலை ஒன்றுக்கான புதிதாக நிருமாணிக்கப்பட்ட
கட்டிடம்‌ திறந்து வைக்கப்பட்டது

சுமார்‌ 175 மில்லியன்‌ ரூபா செலவில்‌ நிர்மாணிக்கப்பட்ட
குறித்த கட்டிடமானது இன்று (24) பிரதியமைச்சர்‌
அப்துலலா மஃறூப்‌ அவர்களின்‌ வேண்டூகோளிற்கிணங்க
வர்த்ததவாணிப கைத்தொழில்‌ கூட்டூறவு,நீண்ட காலம்‌
இடம்‌ பெயர்ந்தோரை மீளக்குடியேற்றுதல்‌ மற்றும்‌ திறன்‌
அபிவிருத்தி அமைச்சர்‌ ரிசாத்‌ பதியுதீன்‌ அவர்களால்‌
உத்தியோகபூர்வமாக திறநது வைக்கப்பட்டது.

இப்பகுதி இளைஞர்களின்‌ நீண்ட கால தேவையாக இருந்த
இக்‌ ஹோட்டல்‌ பாடசாலை மூலமாக ஷஹோட்டல்‌
முகாமைத்துவ பாடநெறிகள்‌ இடம்‌ பெற்று வருகின்றது
இதனால்‌ இளைஞர்‌ யுவதிகள்‌ குறித்த துறையில்‌ தொழிற்‌
தகைமை சான்றிதழ்‌ பெறக்கூடியதும்‌ தொழிற்தகைமை
மிக்கவராகவும்‌ காணப்படூவார்கள்‌ என
எதிர்பார்க்கப்படூகிறது இதில்‌ துறை முகங்கள்‌ கப்பற்‌ துறை
பிரதியமைச்சர்‌ அப்துல்லா மஃறூப்‌, தொழிற்‌ பயிற்சி
அதிகார சபையின்‌ உயரதிகாரிகள்‌,பயிற்சி தொடர்பான
இளைஞர்‌ யுவதிககள்‌ என பலர்‌ பங்கு கொண்டார்கள்‌.

-ACMC ஊடகப்பிரிவு


Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்