மட்டுப்படுத்தப்பட்ட அமைச்சரவையை கொண்ட தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டுள்ளது

‘நம்பிக்கையின் உதயம்´ என்று பெயரிடப்பட்டுள்ள தேசிய மக்கள் சக்தியின்
 ஜனாதிபதி தேர்தலுக்கான தேர்தல் விஞ்ஞாபனம் இன்று (26) முற்பகல் இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெற்றது.

பல்வேறு துறைகள் தொடர்பில் கொள்கை மற்றும் திட்டங்களை கடந்த தினங்களில் நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் வௌியிட்டிருந்த நிலையில் அவை அனைத்தையும் உள்ளடக்கி ´நம்பிக்கையின் உதயம்´ என்ற பெயரில் இந்த தேர்தல் விஞ்ஞாபனம் வௌியிடப்பட்டுள்ளது.

இந்த சந்தர்ப்பத்தில் மகா சங்கத்தினர், தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுர குமார திஸாநாயக்க மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த பிரதிநிதிகள், புத்திஜீவிகள், கலைஞர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

பொருளாதாரம், சுகாதாரம், கல்வி, போக்குவரத்து, கலாசாரம் உள்ளிட்ட துறைகளின் ஊடாக தனது கொள்கை மற்றும் திட்டங்களை கடந்த தினங்களில் நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் வௌியிட்டிருந்த நிலையில், அவை அனைத்தின் உள்ளடக்கமே ´நம்பிக்கையின் உதயம்´ என்ற பெயரில் தேர்தல் விஞ்ஞாபனமாக வௌியிடப்பட்டுள்ளது.


அதில் உள்ளடங்கப்பட்டுள்ள சில யோசனைகள்:

அமைச்சரவை 30 ஆக மட்டுப்படுத்தப்படும்!(அமைச்சர்கள் 30, பிரதி அமைச்சர்கள் 30)

இராஜாங்க மற்றும் அமைச்சரவை அந்தஸ்து அற்ற அமைச்சர்கள் இனிமேல் இருக்கப்போவதில்லை.

வாகனத்தை பெற்றுக்கொள்வதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் இல்லாமல் செய்யப்படும்.

ஜனாதிபதி தேவைக்காக வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கப்படும் நிதி, 90 விகிதமாக குறைக்கப்படும்.

நாடு முழுவதும் காணப்படும் ஜனாதிபதி மாளிகைகள், சுற்றுலா ஹோட்டல்கள், கலாச்சார மையங்கள் மற்றும் நூலகங்களாக மாற்றப்படும்.

திருடப்பட்ட மக்களின் பணங்கள் மீண்டும் மக்களிடமே வழங்கப்படும்.
-அல்மசூரா நியூஸ்
Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்