சுர்ஜித் சுயநினைவை இழந்துவிட்டான்! மருத்துவர்களின் அறிவிப்பால் அதிர்ச்சி

ஆள்துளை கிணற்றில் சிக்கி 3-வது நாளாக தவித்து வரும் சுர்ஜித் சுய நினைவை இழந்து இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பில் திருச்சி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியில் முதன்மை மருத்துவர் கூறுகையில், “குழந்தை சுர்ஜித் உயிரோடு இருப்பதை நாங்கள் உறுதி செய்துள்ளோம். அதற்கான அறிகுறிகள் எங்களுக்கு தெளிவாக தெரிகின்றன. குழந்தையின் உடல் வெப்ப நிலையை வைத்து குழந்தை உயிரோடிருப்பதை எங்களால் உறுதி செய்ய இயன்றது.
ஆனால் குழந்தை தன்னுடைய சுயநினைவை இழந்து விட்டது. 75 மணி நேரம் சுயநினைவை இழந்தால் கூட குழந்தையை மீட்பதற்கான அனைத்து வசதிகளும் இங்கு தயார் செய்யப்பட்டுள்ளன. குழந்தையை காப்பாற்றுவதற்கான அனைத்து வசதிகளும் நிரம்பிய 5 அம்புலன்ஸ்கள் இங்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. விரைவில் குழந்தையை வெளியே எடுத்துவிட்டால், குழந்தையை மீட்பதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளும் உள்ளன” என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியானது அப்பகுதி மக்களிடையே சற்று ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்