நான் முல்லைத்தீவில் குடியேறப்போகின்றேன்! ஞானசார தேரர் அறிவிப்பு

முல்லைத்தீவுக்கு சென்று குடியேறப் போவதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளரான கலகொட அத்தே ஞானசார தேரர் அறிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனைக் கூறினார்.

யார் தடுத்தாலும் அதனை செய்யப்போவதாகவும் குறிப்பிட்ட அவர், மகிந்த அல்லது ரணில் உட்பட எந்த அரசாங்கம் வந்தாலும் முல்லைத்தீவுக்குச் சென்று குடியேறுவதை எவராலும் தடுத்துவிட முடியாது என்றும் சூளுரைத்தார்.

எனினும் தேர்தல் காலம் என்பதால் தாம் அமைதி முறையை கடைபிடிப்பதாகவும் ஞானசார தேரர் கூறினார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“வடக்கில் தற்போது தனி அரசாங்கமே காணப்படுகிறது. பிரிவினை வாதத்தை வளர்க்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகளுக்கு அடிபணிய வேண்டிய தேவை எமக்கில்லை .

தனி நாடு பற்றி பேசி சட்டத்தை தங்கள் இஷ்டத்துக்கு அவர்கள் நடைமுறைப்படுத்துவதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது .

குருகந்த விகாராதிபதியின் இறுதி கிரியைகளை தமிழ் தேசிய கூட்டமைப்பின் சில அரசியல்வாதிகளே குழப்பியடித்தனர்.

அங்கிருந்த தமிழ் சகோதர்கள் இதற்கு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. குருகந்த தேரர் பொதுமக்களுக்கு சேவை செய்தவர். புற்று நோயால் பீடிக்கப்பட்டு மரணமடைந்தார்.

சுமார் 11 வருட காலம் குருகந்த பகுதி மக்களுக்காகவே அவர் சேவை செய்து வந்தாரே தவிர தனிப்பட்ட தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவில்லை.

வடக்கில் வேறொரு அரசாங்கமே இருக்கிறது. இந்த அரசாங்கத்தின் குதர்க்கமான ஆட்சியின் காரணமாகவே சிங்கள பௌத்தர்களுக்கு இந்த நாட்டில் இடமில்லாமல் போகிறது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் நாடாளுமன்றத்தில் தாம் இந்த நாட்டுக்கு விசுவாசமாக இருப்பதாக சத்தியப்பிரமாணம் செய்து விட்டு அநுராதபுரத்துக்கு அப்பால் சென்றவுடன் தனி நாடு பற்றி பேசுவது எந்த வகையில் நியாயமாகும்?

எங்களுக்கு அமுல்படுத்தப்படும் சட்டம் பிரிவினைவாதிகளுக்கு அமுல்படுத்தப்படுவதில்லை. சட்டத்தை அவர்கள் தங்கள் இஷ்டத்துக்கு நடைமுறைப்படுத்துவதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை.” என கூறியுள்ளார்.

-ஜப்னா நியூஸ்

Comments

popular posts

சற்றுமுன் தம்புள்ளையில் விபத்து

சற்றுமுன் கொழும்பு கோல் பேஸ் பகுதி 4 மாடி கட்டடமொன்றில் தீ..

20 நாட்கள் பாராளுமன்றம் சென்று வந்தால் போதுமானது. அவர்களுக்கே ஓய்வூதியமும் வழங்கப்படும்- அனுர குமார