ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர் அபூ பகர் அல் பக்தாதி கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் அறிவிப்பு

ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர் அபூ பகர் அல் பக்தாதி கொல்லப்பட்டுள்ளதாக நம்பப்படுவதாக அமெரிக்க ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

வடமேற்கு சிரியாவில் அமெரிக்க இராணுவம் மேற்கொண்ட தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதாக நம்பப்படுவதாக அமெரிக்க பாதுகாப்புத் தரப்பினரை மேற்கோள்காட்டி தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

எவ்வாறிருப்பினும், மரபணு பரிசோதனையின் பின்னரே இறுதித் தீர்மானம் மேற்கொள்ள முடியும் என்றும் பிந்திக் கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தத் தாக்குதலின்போது, ஐ.எஸ்.ஐ.எஸ் தலைவர், தனது தற்கொலை அங்கியை வெடிக்கச் செய்திருக்கலாம் என்று நம்பப்படுவதாக அமெரிக்க பாதுகாப்பு தரப்பு தெரிவித்துள்ளது.

ஐ.எஸ்.ஐ.எஸ் தலைவர் தலைமறைவாகியிருந்த இடத்தை அறிந்து கொள்வதற்காக சி.ஐ.ஏ எனப்படும் மத்திய புலனாய்வு பணியகத்தின்  ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்பட்டதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதேநேரம், ஐ.எஸ்.ஐ.எஸ் தலைவர் அபூ பகர் அல் பக்தாதி தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இன்று விசேட அறிவித்தலை வெளியிட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Comments

popular posts

எட்டியாந்தோட்டை சம்பவம்; மஹிந்த அதிரடி உத்தரவு!

காலி, இரத்தினபுரி மாவட்டங்களில் இரு பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் ; இருவர் கைது

மொத்தமாக 4 நியமனங்கள் ஜனாதிபதி யால் வழங்கப்பட்டது.