தாராபுரம் ஹாஜா அலாவுதீன் எழுதிய “ஹாஜாவின் வானொலி நாடகங்கள்” மற்றும் “எங்க ஊரு பாட்டு”

அஸீம் கிலாப்தீன்

தாராபுரம் ஹாஜா அலாவுதீன் எழுதிய  “ஹாஜாவின் வானொலி நாடகங்கள்” மற்றும் “எங்க ஊரு பாட்டு” ஆகிய நூல்களின் வெளியீட்டு விழாவும் அவரது 40 வருட கலை வாழ்வை கௌரவிக்கும் நிகழ்வும் எதிர்வரும் 27ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை பி ப 02.00 மணிக்கு கொழும்பு தபால் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெறும்  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீனின் பிரதம விருந்தினராக கலந்து கொள்கிறார்

கலாநிதி யூசுப் கே மரைக்கார் தலைமையில் இடம் பெறும் இந்த நிகழ்வில் அறிமுகவுரையை கலைவாதி கலீலும் சிறப்புரையை கலாநிதி எ.எஸ்.எம் அனஸ் அவர்களும்  வெளியீட்டுரையை முல்லை முஸ்ரிபாவும் நிகழ்த்துகின்றனர். 
ஹாஜாவின் வானொலி நாடகங்களை கலாநிதி ரவுப் ஸெய்னும் எங்கஊரு பாட்டை அஸ்ரப் சிஹாப்தீனும் ஆய்வு செய்கின்றனர்.  கவிநேசன் நவாஸ் வாழ்த்து கவி பாடுகின்றார்  இந்த நிகழ்வை அற்புதம் கலை வட்டத்தின் போஷகர், பொறியியலாளர் எஸ் எம் யாசீன் நெறியாள்கை செய்கிறார்

Comments

popular posts

டாக்டர் பிரியங்கா ரெட்டியை பலாத்காரம் செய்து எரித்து கொன்ற 4 பேரையும் போலீசார் என்கவுன்டரில் சுட்டு கொன்றனர்.

6 வயது சிறுவன் அப்துல்லாஹ்வால் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ அவர்களுக்கு அனுப்பிய கடிதத்திற்கு பிரதமர் நன்றி தெறிவித்துள்ளார்

நல்லட்சியின் பல்வேறு வரிகள் நீக்கப்பட்டன