தீப திருநாளை போலவே எல்லா நாட்களும் ஒளிமயமானவையாக அமைதல் வேண்டும் - தீபாவளி வாழ்த்து செய்தியில் கோதாபய ராஜபக்ஸதீப திருநாளை போலவே இந்நாட்டில் உள்ள தமிழ் மக்கள் அனைவரினதும் வாழ்வில் எல்லா நாட்களும் ஒளிமயமானவையாக அமைதல் வேண்டும் என்று நாம் வாழ்த்துகின்றோம். -

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ தீபாவளி திருநாளை முன்னிட்டு விடுத்த வாழ்த்து செய்தியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவரது முழுமையான வாழ்த்துச் செய்தி வருமாறு:-

இலங்கை மணித் திருநாட்டில் வாழ்கின்ற தமிழ் – இந்துப் பெருமக்கள் காலம் காலமாக தீபாவளித் திருநாளைச் சிறப்பான முறையில் கொண்டாடி வருகின்றார்கள். உலகம் தழுவிய மானுட சமுதாயத்தினுடைய ஒளிமயமான வாழ்க்கையின் குறியீடாகவே இந்தத் தீபத் திருநாள் அமையப் பெற்றுள்ளது.  தீமைகளில் இருந்து நன்மைகளை நோக்கியும், இருளில் இருந்து வெளிச்சத்தை நோக்கியும் மானுட சமுதாயத்தை அழைத்து செல்கின்ற விடியலை இது குறித்து நிற்கிறது. ஆகவே இந்நாட்டில் உள்ள தமிழ் - இந்துப் பெருமக்களோடு சேர்ந்து நாமும் தீபத் திருநாளை வரவேற்றுக் கொண்டாடுவதோடு அவர்களுக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்களையும் இம்மகத்தான தருணத்தில் தெரிவித்துக் கொள்கின்றோம்.

நாம் எமது நாட்டு மக்களுக்கு ஒட்டுமொத்த நன்மைகளையும் பெற்று தந்து அவர்களின் வாழ்க்கையையும் எதிர்காலத்தையும் ஒளிமயமானதாக அமைத்துத் தருவதற்காகவே எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராகத் தேர்தல் களத்தில் குதித்துள்ளோம். எனவே எமக்கு இத்தேர்தலில் கிடைக்ககப்போகும் மகத்தான வெற்றியானது நாட்டு மக்கள் அனைவரினதும் ஒளிமயமான வாழ்க்கைக்கும், எதிர்கால விடியலுக்குமான வெற்றியாகவும் உத்தரவாதமாகவும் அமையப்பெறும் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது.  அதற்கேற்றால்போல எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதியில் இருந்து வர இருக்கும் எல்லா நாட்களையும் இலங்கை மக்கள் அனைவருக்கும் சிறப்பானவையாகவும்,  ஒளிமயமானவையாகவும் நாம் உருவாக்கித் தருவோம்.

அதே போல வரவிருக்கும் எமது வெற்றியானது வடக்கு, கிழக்கு, மலையகம் அடங்கலாக எமது நாடு முழுவதும் பரந்து வாழ்கின்ற எமது தமிழ் உறவுகளுக்கும் நிச்சயமாக ஒளிமயமான வாழ்க்கைக்கும்,  எதிர்கால விடியலுக்குமான வெற்றியாகவும் நிச்சயம் அமையும் என்ற உத்தரவாதத்தினையும் நாம்  மகிழ்ச்சியோடு உங்கள் அனைவருக்கும் அறியத் தருகின்றோம். மேலும் தீபாவளிக்கு தீர்வு வரும், பொங்கலுக்கு தீர்வு வரும் என்று உதட்டளவில் உத்தரவாதங்களை வழங்கி நாட்களைக் கடத்தாது எமது தமிழ் மக்களின் வாழ்வாதாரம், வாழ்வியல், பொருண்மியம், இருப்பு, பாதுகாப்பு, உரிமை,அபிவிருத்தி, மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவற்றில் காணப்படும் சிக்கல்கள் அனைத்திற்கான தீர்வுகளையும் குறித்த கால எல்லைகளுக்குள் நாம் நிச்சயம் பெற்று தருவோம் எனவும் நாம் உறுதி கூறுகிறோம்.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்