இனவாத அரசியல் கலாசாரத்தால் இலங்கையின் எதிர்காலம் ஆபத்து – அரசுக்கு கரு ஜயசூரிய எச்சரிக்கை புதிய அரசமைப்பை உருவாக்கி தமிழ், முஸ்லிம் மக்களின் அடிப்படை உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டும். இனவாதத்தைத் தூண்டி அரசியலை முன்னெடுக்கும் தற்போதைய அரசியல் பயணம் தொடருமாயின் எதிர்காலத்தில் மிகப்பெரிய பிரச்சினைகள் நாட்டினுள் உருவாகும் என எச்சரிக்கை விடுத்துள்ளார் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய. நாட்டின் சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் கருத்துரைக்கும்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:- “நாட்டில் தற்போது உருவாக்கப்பட்டு வருகின்ற இனவாத அரசியல் கலாசாரம் இலங்கையை நீண்ட காலத்துக்கு நெருக்கடிக்குள் தள்ளப்போகின்றது. இந்த விடயத்தில் அனைவரும் குறுகிய நோக்கத்தில் பார்க்கின்றனர். ஆனால், தூரநோக்கு சிந்தனையுடன் இந்த நாட்டின் இன – மத உரிமைகளைப் பலப்படுத்தும், பாதுகாக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். புதிய அரசமைப்பு உருவாக்கப்பட வேண்டும். இந்தப் புதிய அரசமைப்பில் ஜனநாயகம், மனித உரிமைகள் முழுமையாகப் பாதுகாக்கப்பட வேண்டும். அரசமைப்பின் 20 ஆவது திருத்தத்தைக் கொண்டுவந்து அதன் மூலம் பறிக்கப்பட்ட உரிமைகள் முழுமையாக
இந்த நாட்டில் உறுதியான தலைமைத்துவம் உருவாக உங்கள் பங்களிப்பை வழங்குங்கள் ராமன்ஞ நிகாய மஹாநாயக தேரர் கலாநிதி ஹிஸ்புல்லாஹ்விடம் தெரிவிப்பு.

ஜனாதிபதி வேட்பாளர் கலாநிதி ஹிஸ்புல்லாஹ் அவர்கள் இன்று (31.10.2019) காலை கண்டிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த போது #ராமன்ஞ நிகாய மஹாநாயக நாபனே ப்ரேம ஶ்ரீ நாயக தேரர் அவர்களை நேரில் சந்தித்து தான் இந்த தேர்தலில் போட்டியிடுவது ஏன் என்று தெளிவூட்டியதுடன், தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் இருக்கும் விவரங்கள் தொடர்பிலும் முழு விளக்கம் வழங்கினார்.
இலங்கையில் வாழும் சகல இனத்தவர்களும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதுடன் பெரும்பான்மை மக்கள் மத்தியில் இருக்கும் முஸ்லிம்கள் பற்றிய தேவையற்ற சந்தேகங்களை நீக்குவதற்க்காகவுமே தான் இந்த தேர்தலில் போட்டியிடுவதாக மஹாநாயக தேரருக்கு கலாநிதி ஹிஸ்புல்லாஹ் எடுத்துக் கூறினார்.
ஹிஸ்புல்லாஹ்வின் கருத்துக்களை ஏற்றுக்கொண்ட மஹாநாயக்க தேரர் அவர்கள் இனங்களுக்கிடையில் ஒற்றுமை மிக அவசியமானது. கடந்த காலத்தில் நாம் வாழ்ந்ததை போல் ஒற்றுமையாக வாழ வேண்டும். பிரிவினைகள் இருக்கக் கூடாது.
குறிப்பாக எதிர்கால இளைஞர்களுக்கு இன ஒற்றுமையை கற்றுக்கொடுக்க வேண்டும். இன ஒற்றுமையில் தான் இந்த நாட்டின் வெற்றியிருக்கிறது. உங்கள் பணியை ஏற்றுக்கொள்கிறேன் என பாராட்டு தெரிவித்ததுடன் இந்த நாட்டில் உறுதியான தலைமைத்துவம் உருவாக உங்கள் பங்களிப்பை வழங்குங்கள் என்றும் ராமன்ஞ நிகாய மஹாநாயக நாபனே ப்ரேம ஶ்ரீ நாயக தேரர் அவர்கள் கலாநிதி ஹிஸ்புல்லாஹ்விடம் தெரிவித்தார்.
-ஹிஸ்புல்லாஹ் ஊடகப்பிரிவு

Comments
Post a comment